பிரியா பிரகாஷுக்கும் ’தல தோனி’தான் ஃபேவரைட்!

இளைஞர் பட்டாளத்தையே தன் பக்கம் ஈர்த்த பிரியாவின் உள்ளத்தை கவர்ந்தவர் தல தோனி தான்.

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும், வைரல் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர், கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் ’கூல் கேப்டன் தோனி’ என்று கூறியுள்ளார்.

இரண்டு நாட்களாக இணையதளத்தில் சென்சேஷனாக பேசப்பட்டு வருபவர் தான் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். தனது கண் அசைவுகளால் ஒட்டு மொத்த இளைஞர்களையும் கவர்ந்து இழுத்த இவர், இந்த வார வைரல் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார்.

மலையாள இயக்குனர் ஓமர் லுலு இயக்கக்த்தில் அடுத்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தான் ‘ஒரு அடார் லவ்’. பள்ளி பருவ காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இருந்து, ’மாணிக்ய மலராய பூவி’ என்ற சிங்கிள் சாங் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பாப்புலர் ஆகியது.

பாட்டின் மெட்டை விட, பாடல் காட்சியில் வந்த பிரியா பிரகாஷ் வாரியர் தான் வைரலானர். தனது காதலனை பார்த்து, அவர் காட்டிய கண் அசைவுகள், இளைஞர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்து சென்றது. அடுத்த நாளே பிரியா மிகப் பெரிய பிரபலமானர். அவரின் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களை ரசிகர்கள் பின் தொடர துவங்கினார்கள். ஒரே நாள் இரவில் பிரியா பிரகாஷ் வாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கக்தை மட்டும் 2.8 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்தனர்.

இப்படி, இந்தியா முழுவதும் ஹாட்டஸ்ட் சென்சேஷனாக புகழப்பட்டு வரும் பிரியாவிடம், ஃபேவரைட் கிரிக்கெட் ப்ளேயர்    யார்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவரின் ஒரே பதில், ‘கூல் கேப்டன் தல தோனி’.தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தான், பெண்களின் உள்ளம் கவர்ந்த கிரிக்கெட் வீரர் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளத்தையே தன் பக்கம் ஈர்த்த பிரியாவின் உள்ளத்தை கவர்ந்தவர் தல தோனி தான்.

×Close
×Close