New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/04/bihar-car-hits-2025-08-04-18-10-23.jpg)
பெண் மீது மோதி பாலத்தில் பாய்ந்த கார்: பீகாரில் பயங்கரம்! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள ஜமுவா கரகத் பகுதியில் நடந்த கோர விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மீது மோதி பாலத்தில் பாய்ந்த கார்: பீகாரில் பயங்கரம்! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள ஜமுவா கரகத் பகுதியில் நடந்த கோர விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ஜமுவா கரகத் பகுதியில் உள்ள பாலத்தில் பவன் (8), சலாமுதீன் அன்சாரி (30), சலீம் அன்சாரி (32) ஆகிய 3 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தச் சாலையில் வேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதேவேளையில், சாலை ஓரமாக இந்துதேவி (40) என்ற பெண் நடந்து சென்றுகொண்டிருந்தார். கார் தனது நோக்கி வருவதைக் கண்ட அவர் தப்பிக்க முயன்றார். ஆனால், அவர் சுதாரிப்பதற்குள், கார் முதலில் பெண் மீது மோதியது. பின்னர், பாலத்தில் அமர்ந்திருந்த 3 பேர் மீதும் மோதி, பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு வாய்க்காலில் தலைகுப்புற விழுந்தது. இந்த கோர விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் அலறினர்.
விபத்து ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் ஜமுவான் கிராமத்தைச் சேர்ந்த இந்து தேவி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பவன், சலாமுதீன் அன்சாரி, சலீம் அன்சாரி ஆகியோர் பிக்ரம்கஞ்சில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருப்பது பார்ப்பவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.