New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Capture.jpg)
கோவையில் பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை படத்தை பார்த்த குட்டி குதிரை அதன் பின்னால் ஓடு சென்ற காட்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
கோவையில் பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை படத்தை பார்த்த குட்டி குதிரை அதன் பின்னால் ஓடு சென்ற காட்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகிறது.
குதிரையின் பந்தபாசம்: பேருந்தில் ஒரு குதிரையின் படத்தை பார்த்து பின்னால் ஓடும் குட்டி குதிரை.
— Indian Express Tamil (@IeTamil) September 13, 2022
இடம்- கோயம்புத்தூர் | வீடியோ உதவி: பி.ரஹ்மான்#horse | #Kovai pic.twitter.com/W9m8QXlC0d
அங்குள்ள தோட்டத்தில் உள்ள புல்களை உணவாக சாப்பிட்டு பின்னர் அப்பகுதியில் சுற்றி வருகிறது கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்கு சென்றதால் அதனை பிரிந்து குட்டிக் குதிரை தாய்க்குதுறையை தேடி வந்தது.
இந்நிலையில் இன்று பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தல் குதிரை போன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த குட்டி குதிரை பேருந்தை செல்ல விடாமல் பேருந்தையே சுற்றி வந்தது சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பும்போது தாய்குதிரை இருப்பது போன்ற பொம்மையை பார்த்து பேருந்து விடாமல் துரத்தி சென்று கத்தியது இதனை பார்த்த அப்பகுதி மக்கள் குட்டி குதிரையின் பாசத்தை பார்த்து சோகம் அடைந்தனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.