Hospital turns wedding venue : கொரோனா காலங்களில் நடைபெறும் திருமணங்கள் மிகவும் சுவாரசியமானவை. சில நேரங்களில் இரு குடும்பத்தாரின் செலவுகளையும் சர்வ நிச்சயமாக குறைத்து தான் விடுகிறது இந்த திருமணங்கள். பலரும் இரு மாநில எல்லைகளில் நின்று திருமணம் செய்து கொண்டார்கள். சிலர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு நாட்டுக்காக முன்கள பணியாளர்களாக பொறுப்பு வகிக்கின்றனர்.
கைனக்கரியை பூர்வீகமாக கொண்ட மணமகன் சரத் மோனுக்கும் அவருடைய தாயாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மோனுக்கு திருமணம் குறித்த தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட இருவரும் வந்தானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இப்படி சூழல் மிகவும் இக்கட்டாக இருக்கின்ற போதிலும் நிச்சயமிட்டபடி திருமணம் நடைபெற வேண்டும் என்று எண்ணிய இருவீட்டாரும் மருத்துவமனையிலேயே திருமணத்தை நடத்த ஒப்புக் கொண்டனர்.
ஆழப்புலா மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை மூத்த நிர்வாகி மருத்துவர் ஆர்.வி. ராம்லால் ஆகியோரிடம் அனுமதி பெற்றபிறகு மோன் அபிராமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். பி.பி.இ. ஆடை அணிந்து வந்த மணமகளுக்கு மருத்துவ வளாகத்தில் தாலி கட்டினார் மணமகன். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil