இனிக்கு இவ்வளவு விஷயம் ட்விட்டரில் ட்ரெண்டா?

உத்தரவை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இன்று ட்விட்டரில் காரசாரமான விவாதங்கள் பல டாப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றன.   இன்று காலை அதிமுகவின் உண்ணாவிரதத்தில் தொடங்கிய ட்விட்டர் ஹாஷ்டேக்,  நடிகர் சங்கத்தின் போராட்டம் வரை நீண்டுள்ளது. நடு நடுவில்  சினிமா குறித்து விஷயங்கள் வந்து சென்றால் நாளின் இறுதியில், அரசியல்  நிகழ்வுகளே ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளன.

குறிப்பாக, மோடியின் அறிவிப்பு சில நிமிடங்களிலேயே வாபஸ் வாங்கப்பட்ட #FAKENEWS ஹாஸ்டேக் பட்டித் தொட்டி எங்கும் தீயாக பரவி வருகிறது. இதோ,  இன்றை நாளில் ட்ரெண்ட்டான டாப் 5  நிகழ்வுகள்.

1. #SterliteProtest

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில்  51 நாட்களாக மக்கள் போராட்டம் செய்து வருகின்றன. கடந்த 1 வாரமாக  இந்த போராட்டம் குறித்த ஹாஸ்கேட் தான் ட்விட்டரில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று, ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்குச் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கிய சிப்காட்டிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

2. “10 Maths”

சிபிஎஸ்இ 12 மற்றும் 10 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், 10ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு கணித  மறுதேர்வு இல்லை என்று மத்திய அரசு அறிவித்தது மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் கணிதம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், இன்று மத்திய அரசு மறு தேர்வு கிடையாது என்று அறிவித்தது.

3. #FakeNews

பொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை செய்யும் உத்தரவை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டது இந்திய அளவில் ட்ரெண்டானது. சமூக வலைதளங்கள் மூலம் போலியான செய்திகளை பரவச் செய்வதாலும், சில பத்திரிகைகள், பத்திரிகையாளர்களும், தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி விடுவதாலும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார். இந்த விவகாரத்தில் அரசியல் தரப்பிலும், பத்திரிகையாளர்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த உத்தரவை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

4. #aiadmkhungerstrike

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி இன்று தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் அதிமுக உண்ணாவிரதம் நடத்க்தினர். இதில், சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற உண்ணாவிரதத்தில், முதல்வர், இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாடளுமன்ற வளாகத்தில் எம்.பி.,க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

5. #NadigarSangam

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையை வலியுறுத்தி வரும் 8ம் தேதி நடிகர் சங்கம் கண்டன அறவழிப்போராட்டம் நடத்தயிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும், அரசிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருப்பதாகவும் கடந்த சனிக்கிழமை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close