கொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஒரு ஆரோக்கியமான மனிதருக்கு தொற்று ஏற்பட்டால் அது எப்படி அவருடைய நூரையீரலை வேகமாகத் தாக்கி பரவுகிறது என்பதைக் காட்டும் ஒரு 3டி வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

By: Updated: April 2, 2020, 12:45:01 PM

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஒரு ஆரோக்கியமான மனிதருக்கு தொற்று ஏற்பட்டால் அது எப்படி அவருடைய நூரையீரலை வேகமாகத் தாக்கி பரவுகிறது என்பதைக் காட்டும் ஒரு 3டி வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையால் வெளியிடப்பட்ட இந்த 3டி மருத்துவ வீடியோ ஒரு ஆரோக்கியமான நபரின் நுரையீரல் வழியாக நாவல் கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதைக் காட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறி இல்லாத நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோயாளியின் நுரையீரலின் 3டி வீடியோவை உருவாக்க, பொதுவாக புற்றுநோய் பரிசோதனைகளுக்கு அல்லது அறுவை சிகிச்சைகளைத் திட்டமிட எடுக்கப்பட்ட சி.டி ஸ்கேன்கள் படங்களை மருத்துவமனை பயன்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸை ஆய்வு செய்ய முதலில் பயன்படுத்தப்பட்ட படங்கள் நுரையீரல் பெரிய அளவில் பாதிக்கபட்டிருப்பதைக் காட்டுகின்றன. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அடைந்த பின்னர், நுரையீரலுக்கு விரைவாக சேதம் ஏற்பட்டதையடுத்து வாஷிங்டன் நோயாளிக்கு உயிர் வாழ சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையின் தொராசிக் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் கீத் மோர்ட்மேன் கூறியதை சி.என்.என். மேற்கோள் காட்டியுள்ளது.

இந்த ஸ்கேன் படங்கள் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியை மட்டும் காட்டவில்லை பாதிக்கப்பட்ட நூரையீரல்களின் இரண்டு பகுதிகளையும் காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த 3டி வீடியோ இளைஞர்களாக இருக்கும் நோயாளிகளுக்கூட இந்த வைரஸ் தொற்று எவ்வளவு வேகமாகப் பரவும் என்பதை காட்டுகிறது.

கோவிட்-19 முதலில் மனிதர்களின் சுவாச மண்டலத்தைத்தான் தாக்குகிறது. இதனால், நோய்த்தொற்று கடுமையாகும் நேரத்தில் சுவாசிப்பதில் சிரமம் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

இருப்பினும், பெரும்பாலான நேரங்களில் கொரோனா வைரஸ் தொற்று லேசானவையாக இருக்கின்றன. அது மூக்கு, தொண்டையில் இருந்தால் இருமல் சற்று அதிகமாக இருக்கும். வைரஸ் நுரையீரலை அடையும் போது ஆபத்து தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் ஆழமாக திசுக்களை பாதிக்கும்போது, நுரையீரலில் அதிக அழற்சி ஏற்படுகிறது, இதனால் சுவாசிப்பது கடினமாகிறது. நுரையீரல் அழற்சி இரத்தத்தில் ஆக்ஸிஜனேற்றம் செய்வதற்கும் கார்பன் டை ஆக்சைடை அகற்றுவதையும் தடுக்கிறது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நோயாளிகளை வென்டிலேட்டர்களில் வைக்க வேண்டும். இது ஒரு நோயாளிக்கு சுவாசிக்க முடியாதபோது சுவாசிக்க உதவுகிறது. ஏழு நோயாளிகளில் ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரமம் மற்றும் பிற கடுமையான சிக்கல்கள் உருவாகின்றன. அதே நேரத்தில் 6% பேர் ஆபத்தான நிலைக்கு மாறுகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:How quickly coronavirus can attack a healthy persons lungs 3d video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X