நான் குள்ளமாக இருப்பதால், என்னை எல்லாரும் கிண்டல் செய்கின்றனர், அதனால் நான் சாகப்போகிறேன் என்று கூறி அழுத சிறுவனுக்கு எக்ஸ்மேன் படத்தின் வோல்வரின் கேரக்டரில் நடித்த ஹியூக்மேன் ஜாக்மேன் நட்பு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளிச் சிறுவன் ஒருவன் தன் தாயிடம் வந்து “நான் குள்ளமாக இருப்பதால் தன்னை சக மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள். எனக்கு இந்த உலகத்தில் வாழவே படிக்கவில்லை. எனக்கு ஒரு கயிறு கொடுங்கள். அல்லது என்னைக் கொல்ல வேண்டும் என யாராவது நினைத்தாலும் எனக்குச் சந்தோஷம் தான்” எனக் கதறி அழுகிறான். இதை அவனது தாய் தனது மொபைல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே அந்த குழந்தையைச் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வரலாகப் பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து அந்த சிறுவனிற்காக ஆறுதல் வார்த்தைகளையும், சொல்லி சிறுவனைக் கிண்டல் செய்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோவை, யாரக்கா பேல்ஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
Quaden – you’ve got a friend in me. #BeKind @LokelaniHiga https://t.co/8dr3j2z8Sy pic.twitter.com/jyqtZYC953
— Hugh Jackman (@RealHughJackman) February 20, 2020
இந்த வீடியோவை பார்த்த ஆஸ்திரேலிய நடிகரும், எக்ஸ்மேன் படத்தில் வோல்வரின் கேரக்டரில் நடித்த ஹியூக் ஜாக்மேன், நீங்கள் என்னை நண்பராக பெற்றிருக்கிறீர்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய ரக்பி நட்சத்திர வீரர் லாட்ரெல் மிட்செல், குவாடனை பெர்சனலாக சந்தித்து தான் உனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுபோன்று பல பிரபலங்கள் தொடர்ந்து குவாடனுக்கு நட்புக்கரம் நீட்டி வருகின்றனர்.
குவாடனுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக #WeStandWithQuaden என்ற ஹேஷ்டேக்குடன் துவங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம், நிறைய ஆதரவு மெசேஜ்களால் நிரம்பி வழிகின்றன.
இதுமட்டுமல்லாது, #StopBullying என்பது டிரெண்டிங் ஆனது மட்டுமல்லாமல், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அவர்கள் அதில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil