New Update
/indian-express-tamil/media/media_files/ovvc9hmDJujTye2K39bD.jpg)
வீட்டில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கரன்சி மூட்டைகளைக் காட்டி, 20 முதல் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை மறைத்து வைத்துள்ளதகாத் தெரிவித்துள்ளார்.
வீட்டில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கரன்சி மூட்டைகளைக் காட்டி, 20 முதல் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை மறைத்து வைத்துள்ளதகாத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், மணிகொண்டா நகராட்சியின் முன்னாள் துணை நிர்வாக பொறியாளர் சுவர்ண ஸ்ரீபாத் ஒரு அதிர்ச்சியான வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது மனைவி லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்கள் வீட்டில் லஞ்சப் பணம் கட்டுகட்டாக வைக்கப்பட்டிருக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
மணிகொண்டா நகராட்சியின் முன்னாள் துணை நிர்வாக பொறியாளர் சுவர்ண ஸ்ரீபாத், இவர் தனது மனைவி திவ்ய ஜோதி வேலையிலிருந்து வீட்டுக்கு வரும்போது தினமும் லஞ்சப் பணத்தை வீட்டிற்கு கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். அவர் வீட்டில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கரன்சி மூட்டைகளைக் காட்டி, 20 முதல் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை மறைத்து வைத்துள்ளதகாத் தெரிவித்துள்ளார்.
https://x.com/pakkatelugunewz/status/1843926671403123092
மணிகொண்டா நகராட்சியில் ஒப்புதல் அளிப்பதற்காக ஒப்பந்ததாரர்கள் மற்றும் பில்டர்களிடம் தனது மனைவி கமிஷன் வாங்குவதாக சுவர்ணா ஸ்ரீபாத் குற்றம்சாட்டி வீட்டில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பணத்தைக் காட்டி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், தனது மனைவியை லஞ்சம் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும் ஆனால், அவருடைய மனைவி லஞ்சம் வாங்குவதை நிறுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தனது மனைவி திவ்ய ஜோதி லஞ்சம் வாங்கும் ஊழல் நடவடிக்கைகளுக்கு தனது மனையின் அண்ணன் சரத் குமார் உடந்தையாக இருக்கிறார் என்றும் அவர் கிரிமினல் புத்தி கொண்டவர் என்றும், லஞ்சப் பணம் வாங்குமாறு திவ்ய ஜோதிக்கு அவர்தான் அழுத்தம் கொடுப்பதாகவும் சுவர்ண ஸ்ரீபாத் குற்றம் சாட்டியுள்ளார்.
சுவர்ண ஸ்ரீபாத் தனது மனைவி திவ்ய ஜோதி லஞ்சம் வாங்குவதாகக் குற்றம்சாட்டியதை அடுத்து, திவ்ய ஜோதி ஜி.எச்.எம்.சி-க்கு மாற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தெலங்கானா மாநிலம், மணிகொண்டாவில் லஞ்சம் வாங்கிய தனது மனைவியை கணவரே காட்டிக்கொடுத்து வீடியோ வெளியிட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.