Advertisment

13 நிமிடத்தில் 13 கி.மீ பயணித்த இதயம்... சிறப்பு ஏற்பாடு செய்த ஐதராபாத் மெட்ரோ- வைரல் வீடியோ!

ஹைதராபாத்தில் தானம் செய்யப்பட்ட இதயத்தை ஒரு ஆஸ்பிட்டலில் இருந்து மற்றொரு ஆஸ்பிட்டலுக்கு கொண்டு செல்ல மெட்ரோ ரயில் நிர்வாகம் உதவியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மெட்ரோ

மெட்ரோவில் பயணம் செய்த இதயம்

ஹைதாரபாத்தில் மெட்ரோவில் இதயத்தை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றனர். இதற்கு மெட்ரோ நிர்வாகம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். 

Advertisment

எல்பி நகரில் உள்ள காமினேனி மருத்துவமனையில் இருந்து லக்டி-கா-புலில் உள்ள க்ளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு நன்கொடையாளர் இதயத்தை விரைவாகவும் தடையின்றி எடுத்து சென்றனர். இதயத்தை சுமார் 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லக்டி-கா-புலில் உள்ள க்ளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு வெறும் 13 நிமிடங்களில் 13 மெட்ரோ நிலையங்களைக் கடந்து வேகமாக கொண்டு சென்றனர்.

மெட்ரோவில் இதயம் எடுத்து சென்றபோது உள்ளூர் காவல்துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் விமான நிலைய ஊழியர்களால் இது முழுவதும் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. மெட்ரோவில் எந்த இடையூறும் இன்றி இதயம் கொண்டு செல்லப்பட்டது.

Advertisment
Advertisement

அதன்படி, எல்.பி.நகரில் உள்ள காமினேனி ஆஸ்பிட்டலில் இருந்து லக்டி-கா-புலில் உள்ள க்ளீனிகிள்ஸ் குளோபல் ஆஸ்பிட்டலுக்கு டாக்டர்கள் இதயத்தை கொண்டு சென்றனர். இதயத்தை விரைவாக எடுத்துச் செல்லும் வகையில், 13 கி.மீ. தூரத்தை 13 நிமிடங்களில் கடந்து சென்றனர். 

வாகன போக்குவரத்து நெரிசலை கடந்து விரைவில் இதயத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால் மெட்ரோவில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மெட்ரோவில் இதயத்தை மருத்துவர்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Hyderabad Metro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment