பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் காலம் இது. அதுவும், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்வின்போது மாணவர்கள் காலதாமதமாக வந்தால், அவர்களை பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வெழுத அனுமதிக்க மாட்டார்கள். இதனால், ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் காரணமாக மாணவர்கள் படித்ததையே மறந்துவிடுவார்கள்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பொதுத் தேர்வுக்கு செல்லும் 10-ம் வகுப்பு மாணவர்களை ஏற்றிச்சென்ற அரசு பேருந்து ‘புரேக் டவுன்’ ஆனதால், அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாசுலு என்பவர் தலைமையில், தங்களது ரோந்து வாகனத்தில் அமர்த்தி பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அந்த காவலர்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.