இணையமே கொண்டாடிய ட்ராஃபிக் போலீஸ்: அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா?

ட்ராஃபிக் போலீஸ் ஓடி சென்று அந்த மூதாட்டியை தூக்கி ஓரமாக அமர்த்தியுள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த ட்ராஃபிக்  போலீஸ் ஒருவரை, இணையமே கொண்டாடி வருகிறது. அவர் செய்த நற்செயலால்  பலரும் அவரை வெகுமாக  பாராட்டி வருகின்றனர்.

சென்னையில், கடந்த மாதம் உஷா என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட துயரமான சம்பவம் யாரலையும் அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியாது. தனது, கணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த அவரை, ட்ராஃபிக் காவல் துறை அதிகாரி தாக்கியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல் துறை அதிகாரிகள் என்றாலே கொடூரமானவர்கள், இரக்க குணம் அற்றவர்கள் என்ற பிம்பம்   பொதுமக்கள் மத்தியில்  மேலூங்கியது. இந்நிலையில், ஐதரபாத்தில் அரங்கேறிய சம்பவம் ஒன்று,  அனைத்து காவல் துறையினரையும்  பெருமை அடைய செய்துள்ளது.

எல்லா போலீசாரையும்,  தவறாக பார்க்க முடியாது என்று உரக்க சொல்லியுள்ளது.  ”இதுப்போன்ற காவலர்கள் இருந்தால் நாங்கள் ஏன் அவர்களை எதிரியாக பார்க்க போகிறோம்” என்று  இளைஞர்கள் கூறி வருகின்றன. இப்படி இணையமே பாராட்டும் அளவிற்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?

கடந்த  1 ஆம் தேதி  தெலுங்கானாவின் பிரதான சாலையில் , வயதான மூதாட்டி ஒருவர்  தள்ளாடி நடந்து வந்துள்ளார். பின்பு, தீடீரென்று ரோட்டில் மயங்கி விழுந்துள்ளார். அப்போது அந்த சாலையில்,   போக்குவரத்தை சரிசெய்துக் கொண்டிருந்த, கோபால் என்ற ட்ராஃபிக் போலீஸ்  ஓடி சென்று அந்த மூதாட்டியை தூக்கி ஓரமாக அமர்த்தியுள்ளார்.

பின்பு, அவருக்கு  சாப்பிட பக்கத்தில் இருந்த ஹோட்டலில் தானே ஓடிச் சென்று உணவு வாங்கி வந்து, அதை தன் கையாலே ஊட்டியும் விட்டுள்ளார். உடல் நலம் முடியாத அந்த மூதாட்டி, கோபாலை கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லியுள்ளார். அதற்கு கோபால் “என் தாயாக இருந்திருந்தால் செய்திருக்க மாட்டேனா” என்று  கூறிவிட்டு அங்கிருந்து  சென்றுள்ளார்.

கோபாலின் இந்த செயலை பார்த்த  அனைவரும் கண்கலங்கியுள்ளன. மேலும், அங்கிருந்த இளைஞர்கள் சிலர், அவரின் செயலை புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டன.

அன்று இரவே,சமூக வலைத்தளங்களில் கோபால் ரியல் ஹீரோ என்று அனைவராலும் புகழப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட  தெலுங்கானா டிஜிபி மகேந்திர ரெட்டி, கோபாலை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். இது முதல் முறை அல்ல, இதுப் போன்று, பலருக்கு கோபால் ஓடி சென்று உதவி செய்வாராம்.

அந்த பகுதியில் இருக்கும் அனைவருக்கும் கோபால் மீது வெகுவான மரியாதையாம்.

 

×Close
×Close