குடிபோதையில் குழந்தையை விட்டு சென்ற பெண்...குழந்தையின் பசியை போக்க தாயாக மாறிய பெண் போலீஸ்! குவியும் பாராட்டுக்கள்

அக்குழந்தையை குடிகார தாயிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

ஐதராபாத்தில் பசியால் அழுத குழந்தைக்கு, பெண் போலீஸ் தாயாக மாறிய சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்ந்துள்ளது. அந்த பெண் போலீஸூக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

ஐதராபாத் போலீஸ்:

அம்மா என்னும் மந்திரமே….. அகிலம் யாவும் ஆள்கிறதே..  இந்த  வரியை   உணராத உயிர்களே இல்லை.  இந்த சமூகத்தில்  தாய்மார்கள் மீது பார்க்கப்படும் பார்வை மிகவும்  உயர்தரமானது. இதை புரிந்துக் கொள்ளாத இந்த பெண்  சமூகத்தில்  எப்படிப்பட்ட விமர்சனத்தை சந்தித்துள்ளார் என்பதை இந்த   சம்பவம் தெளிவுப்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் கடந்த 30 ,2018 ஆம் தேதி இரவு  குடி போதையில் இருந்த பெண் ஒருவர் தனது இரண்டு மாத பெண் குழந்தையை அங்கிருந்த நபரிடம் கொடுத்து விட்டு  தண்ணீர் குடித்து விட்டு வருகிறேன் என சென்றார்.

சென்றவர், பல மணி நேரம் ஆகியும் குழந்தையை  வாங்க வரவில்லை. தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்ட அந்த நபர் குழந்தையை தனது வீட்டுக்கு தூக்கிச் சென்றார்.  அப்போது தான் பிரச்சனையே ஆரம்பமானது.   2 மாத குழந்தை  பசியால் அழ தொடங்கியதும்  அந்த நபர்  பாக்கெட் பாலை வாங்கி காய்ச்சி கொடுத்தார். ஆனால் குழந்தை அதை குடிக்கவில்லை. என்ன செய்வதென்று   புரியாமல்  குழம்பிய அவர், உடனே குழந்தையை தூக்கி கொண்டு அருகில் இருக்கும் காவல் நிலையம் சென்றார்.

அங்கு சென்று நடந்த அனைத்தையும் விளக்கினார். ஆனால் குழந்தையின் அழுகை மட்டும் நின்றபாடில்லை. பசியால் அழுது கொண்டிருந்த பச்சிளங்குழந்தையை பார்த்து காவல் நிலையத்தில் பணிபுரியும் ரவீந்தர் என்ற காவலர் மனம் உருகினார். குழந்தையின் பசியை எப்படி ஆற்றுவது என்று யோசித்த அவருக்கு ஒரு வழி தென்பட்டது.

தமது மனைவி பிரியங்காவை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். வேறொரு காவல் நிலையத்தில் பணியாற்றும் பிரியங்கா, மகப்பேறு விடுப்பில் வீட்டில் இருந்தார். கணவர் போன் செய்ததும் உடனடியாக காவல் நிலையத்திற்கு  வந்த பிரியங்கா  குழந்தைக்கு தாயாக மாறினார்.

ஆசையுடன் குழந்தையை தூக்கி பசியாற்றினார்.  பின்னர் அக்குழந்தை பெட்லபர்ஸ் என்ற இடத்திலுள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

அடுத்தக்கட்டமாக குழந்தையின்  தாயை கண்டுப்பிடிக்கும் பணியில்  காவல் துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டனர்.

சாஞ்சல்குடா என்ற பகுதியில் ஒரு பெண் அழுது கொண்டு நின்றிருப்பது தெரிய வந்தது.

அப்பெண்ணிடம் விசாரித்ததில் தாம் மது அருந்தியிருந்தததாகவும் போதையில் குழந்தையை எங்கு யாரிடம் கொடுத்தேன் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். அவரை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அப்பெண் தம் குழந்தையை அடையாளங்காட்டினார். உரிய விசாரணைக்குப் பின் அக்குழந்தையை குடிகார தாயிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

பெற்ற குழந்தைபேரில் அக்கறையின்றி இருந்த தாய் கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ளார்.  யாரோ ஒருவருடைய குழந்தையின் பசியை பொறுக்கமாட்டால் பாலூட்டிய மற்றொரு தாய்  பிரியங்காவிற்கு  பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த சம்பவத்தை ஐதராபாத் காவல் துறையினர்  தங்களது  ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். பிரியங்கா மற்றும் அவரது கணவர் ரவீந்தரை  உயர் அதிகாரிகள்  நேரில் சென்று  வாழ்த்தினர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close