Advertisment

500 ரூபாயில் திருமணத்தை முடித்த ஐ.ஏ.எஸ் ஜோடி; சமூக வலைதளங்களில் வைரல்

உலகமே திரும்பிப் பார்க்கும் படியாக, பல நூறு கோடிகள் செலவு செய்து முகேஷ் அம்பானி தனது மகனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்த நிலையில், வெறும் 500 ரூபாய் செலவில் மிகவும் எளிமையாக திருமணம் செய்துகொண்ட ஐ.ஏ.எஸ் ஜோடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
ias wedding

அனைவருக்கும் முன்மாதிரியாக, இருவரும் உயர் பதவியில் இருந்தாலும் ஒரு ஐ.ஏ.எஸ் ஜோடி, தங்கள் திருமணத்தை வெறும் 500 ரூபாயில் முடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Advertisment

உலகமே திரும்பிப் பார்க்கும் படியாக, பல நூறு கோடிகள் செலவு செய்து முகேஷ் அம்பானி தனது மகனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்த நிலையில், வெறும் 500 ரூபாய் செலவில் மிகவும் எளிமையாக திருமணம் செய்துகொண்ட ஐ.ஏ.எஸ் ஜோடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏழை மக்கள், நடுத்தர மக்கள், வசதியானவர்கள் என அனைவருமே தங்கள் திருமணத்தை ஆடம்பரமாக தடபுடலாக ஊரே மெச்சும்படி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருக்கும். ஏழை மற்றும் நடுத்தர வர்க்க இந்தியர்கள் பெரும்பாலும் தாங்கள் சம்பாதித்ததை திருமணம் போன்ற விழாக்களில்தன் செலவுகிறார்கள். சிலர் மிகவும் ஆடம்பரமாக செலவு செய்து கடனாளியாவதும் உண்டு. கடன் வாங்கி கல்யாணம் பண்ணி, திருப்பிக் கட்டும்போது கஷ்டப்படுவார்கள்.

முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு பல நூறுகோடிகள் செலவு செய்து பிரம்மாண்டமாக  திருமணம் செய்கிறார் என்றால், அவர் உலகப் பணக்காரர்களில் ஒருவர், பணம் இருக்கிறது. செலவு செய்கிறார். அதே போல,நாமும் செய்யலாம் என்று முயற்சி செய்வது புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதையாகத்தான் இருக்கும்.

அனைவருக்கும் முன்மாதிரியாக, இருவரும் உயர் பதவியில் இருந்தாலும் ஒரு ஐ.ஏ.எஸ் ஜோடி, தங்கள் திருமணத்தை வெறும் 500 ரூபாயில் முடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அவர்கள் நினைத்திருந்தால், பல லட்சங்களை செலவு செய்து, ஏராளமானவர்களுக்கு அழைப்பு விடுத்து பலரும் மெச்சும்படியாக திருமணத்தை நடத்தியிருக்கலாம். ஆனாலும், பலருக்கும் முன்மாதிரியாக இந்த ஐ.ஏ.எஸ் ஜோடி மிகவும் எளிமையாக, மிகக் குறைந்த செலவில் திருமணம் செய்திருக்கிறார்கள்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் சலோனி சிதானா மற்றும் ஆஷிஷ் வசிஷ்ட் தங்கள் திருமணத்தை எளிமையாக செய்ய விரும்பினர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரை திருமணம் பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து வந்து, ரூ.500 பதிவு கட்டணம் மட்டும் செலுத்தி எளிமையாக திருமணம் நடத்தி முடித்தனர். அவர்கள் மாலை மாற்றிக்கொண்டதுடன் திருமண சடங்குகள் முடிந்தன.

இப்படி மிகவும் எளிமையாக திருமணம் செய்த ஐ.ஏ.எஸ் ஜோடி யார் என்றால், ராஜஸ்தானில் உள்ள அல்வாரைச் சேர்ந்த ஆஷிஷ் வசிஷ்ட் மற்றும் பஞ்சாபின் ஜலாலாபாத்தைச் சேர்ந்த சலோனி சிதானா ஜோடிதான். மத்திய பிரதேசத்தில் பணிபுரியும் அவர்கள் அங்கேயே திருமணம் முடித்தனர். மேலும், திருமணத்திற்கு 2 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்த அவர்கள் மூன்றாம் நாளில் பணிக்கு திரும்பிவிட்டனர். இவர்களின் திருமணம் 2016-ல் நடந்தது.  வெறும் 500 ரூபாயில் நடைபெற்ற இவர்களின் திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment