'புராஜெக்ட் நீலகிரி வரையாடு' திட்டத்தின் வெற்றி: எண்ணிக்கை உயர்வு; ஐ.ஏ.எஸ் அதிகாரி மகிழ்ச்சி!

தமிழகத்தின் அற்புதமான மலைகளில் வாழும் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அற்புதமான மலைகளில் வாழும் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tahr 1

2025-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அற்புதமான மலைகளில் வாழும் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, வனத்துறையில் வனவிலக்குகள் தொடர்பாக சுவாரசியமான பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், 2025-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழகத்தின் அற்புதமான மலைகளில் வாழும் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட, இரண்டாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு 2025-இன் அறிக்கை ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தருகிறது.

Advertisment
Advertisements

2025-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி: இந்த ஆண்டு நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,303 ஆகப் பதிவாகியுள்ளது. இது 2024-இல் இருந்த 1,031 என்ற எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்த ஆய்வு 14 கோட்டங்களில் (divisions) உள்ள 177 தொகுதிகளில் (blocks) நடைபெற்றது. 786 களப்பணியாளர்கள் 3,126 கி.மீ தூரத்தை கால்நடையாகக் கடந்து இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளனர்.

ரூ. 25.24 கோடி மதிப்பிலான 'புராஜெக்ட் நீலகிரி வரையாடு' (Project Nilgiri Tahr) திட்டத்தின்கீழ், அறிவியல் மற்றும் ஆதாரபூர்வ முறைகளைப் பயன்படுத்தி, இந்த நீலகிரி வரையாடு இனத்தின் எண்ணிக்கையை மீட்டெடுப்பதற்கான ஒரு பெரிய பணி தொடங்கப்பட்டுள்ளது.

ரேடியோ காலர், ட்ரோன் கண்காணிப்பு மற்றும் சமூக ஈடுபாடு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முயற்சிக்கு IUCN, TANUVAS, WWF இந்தியா, மற்றும் AIWC போன்ற நிறுவனங்கள் ஆதரவு அளித்து வருகின்றன.

இது, குழுப்பணி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆழமான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வெற்றி என்று பெருமையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.” என்று சுப்ரியா சாஹு மகிழ்ச்சியுடன்  தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒரு பயனர், “தமிழக அரசும் வனத்துறையும், வனவிலங்கு பணியாளர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.” என்று பாராட்டு தெரிவித்துள்ளார். 

மற்றொரு பயனர், “அருமை. அடுத்து ஆசிய யானைகளின் எண்ணிக்கையை 5000 ஆக அதிகரிக்க தமிழ்நாடு பாடுபட வேண்டும். 1990 முதல் அசாம் யானைகளின் எண்ணிக்கை 5000-க்கும் அதிகமாக உள்ளது. இன்றுவரை 6000-ஐ தாண்டவில்லை. இந்த விலைமதிப்பற்ற குட்டிகளை இழக்கும் பிற மாநிலங்களைப் போல தமிழ்நாடு இருக்ககூடாது” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூன்றாவது பயனர், “ஐரோப்பாவிலும் நான் பார்த்திருக்கிறேன், உள்ளூர் பூங்கா போன்ற சிறிய மிருகக்காட்சிசாலை இருக்கும், பள்ளி குழந்தைகள் பார்வையிட 5 விலங்குகள் குறைவாக இருக்கும், மேலும் பள்ளி இடைவேளையின் போது தன்னார்வத் தொண்டு செய்வதற்கான வாய்ப்பும் இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: