நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கு யானை, மிகவும் நுண்ணுணர்வு கொண்டவை யானைகள். வனப் பகுதிகளையொட்டி உள்ள பகுதிகளில் யானைகள் மற்றும் மனிதர்கள் இடையேயான மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
யானைகள் அட்டகாசம் என்று செய்திகளைப் பார்த்திருப்பீர்கள், உண்மையில் யானைகளா அட்டகாசம் செய்கின்றன. யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து, வனங்களை ஆக்கிரமித்து அட்டகாசம் செய்வது யார், யானைகளா, மனிதர்களா என்று கேட்டுப் பாருங்கள்.
காடுகளின் பரப்பளவு குறையும்போது, காடுகளில் தண்ணீர், போதிய உணவு இல்லாதபோது, அல்லது காடுகளுக்கு சுற்றுலா செல்லும் மனிதர்கள் கொடுத்த உணவுக்கு பழக்கமான யானைகள்தான் மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு வருகின்றன. அப்போதுதான், யானைகள் மற்றும் மனிதர்கள் இடையே மோதல் நடைபெறுகிறது. உண்மையில் அந்த இடங்களும்கூட யானைகளின் காடுகள்தான்.
யானைகளை மட்டுமல்ல எந்த விலங்குகளையும் நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே அவற்றால் நமக்கு எந்த தீங்கும் ஏற்படாது. ஆனால், மனிதர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ யானைகளையும் வன விலங்குகளையும் தொந்தரவு செய்யும்போதுதான் மோதல் ஏற்படுகிறது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் மக்களிடையே வனவிலங்குகளைப் பற்றி விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்தும் விதமாக, காடுகளில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாவதும் உண்டு.
Identify the real animal in the video.
— Parveen Kaswan (@ParveenKaswan) July 1, 2024
This is when wildlife gets irritated and try to attack anybody who comes in their way. Video from unknown location. Don’t disturb animals, it is a life threatening. pic.twitter.com/QyUQv1ZHGL
அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், இந்த வீடியோவில் உண்மையான விலங்கை அடையாளம் காணுங்கள் என்று பதிவிட்ட ஒரு யானை வீடியோ சமூக வலைதளங்களி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு குளத்தின் அருகே இருக்கும் சிறு பாலத்தில் ஒரு யானை அதன் போக்கில் நடந்து செல்கிறது. ஒரு நபர் அந்த யானையை பின்னால் சென்று விரட்டி தொந்தரவு செய்கிறார். இதனால், எரிச்சலடைந்த அந்த யானை, கோபத்துடன் திரும்பி விரட்டுகிறது. யானையை தொந்தரவு செய்த நபர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபர் இருவரும் பீதியுடன் ஓடுகிறார்கள். இந்த வீடியோவைப் பார்க்கும் நீங்கள், இந்த வீடியோவில் உண்மையான விலங்கு யார் என்பதை அடையாளம் கண்டிருப்பீர்கள்.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இந்த வீடியோவில் உண்மையான விலங்கை அடையாளம் காணுங்கள்.
வனவிலங்குகள் எரிச்சலடையும்போது தங்கள் வழியில் வரும் யாரையும் தாக்க முயல்கின்றன. இந்த வீடியோ எங்கே பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை. விலங்குகளை தொந்தரவு செய்யாதீர்கள், அது உயிருக்கு ஆபத்தானது.” என்று எச்சரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.