சமூக ஊடகங்களின் காலத்தில் ஒவ்வொரு நாளும் காட்டு விலங்குகள் பற்றிய பல வீடியோக்கள் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில், யானை ஒன்று காரை வழிமறிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில், காட்டு வழியாகச் செல்லும் சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருக்கும்போது, அங்கே வருகிற ஒரு யானைக்கு காரில் இருப்பவர்கள் உணவளிக்க முயன்றனர். ஆனால், அந்த யானை காரை வழி மறிக்கிறது. இதனால், அந்த காரில் இருந்தவர்கள் பீதி அடைந்து காரில் இருந்து இறங்கி தப்பி ஓடுகிறார்கள் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, காட்டு விலங்குகளுக்கு உணவளிக்காதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.
காட்டு வழியே சாலையில், யானையைக் கடந்து செல்லும் கார் யானைக்கு அருகில் மெதுவாகச் சென்று அதற்கு உணவளிக்கிறார்கள். இதையடுத்து, அந்த யானை மேலும், அதிக உணவுக்காக ஆர்வத்துடன் காரை அணுகி உள்ளே துழாவிப் பார்க்கிறது. இதனால், கார் கவிழும் சூழ்நிலை ஏற்பட்டதும், காரின் உள்ளே இருந்தவர்கள் பீதி அடைந்து பயத்தில் அலறுகிறார்கள். பின்னர், ஒரு கட்டத்தில், அவர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடுகிறார்கள். இந்த வீடியோ காட்டு விலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வையும் எச்சரிக்கையும் உணர்த்துகிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிபிடுகையில், “நீங்கள் காட்டு விலங்குகளுக்கு உணவளித்தால், அது உங்களை தாக்கத் தொடங்கும்… ஒரு யானை அப்படிச் செய்துள்ளது. முழுமையான தேடுதலுக்குப் பிறகு அதன் விலைமதிப்பற்ற உணவு கிடைத்ததும் வெளியேறியது. காட்டு விலங்குகளுக்கு உணவளிப்பதை நிறுத்துங்கள்” என்று ட்வீட் செய்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
வனத்துறை அதிகாரிகள் அடிக்கடி வன விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில், காட்டு விலங்குகள் உணவுக்காக தாக்கலாம், அதனால், காயங்கள் ஏற்படலாம், தேவையற்ற சூழ்நிலைகள் உருவாகலாம். இது மக்களுக்கும் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"