நான் பேசியதெல்லாம் சீரியஸாக எடுத்துக்காதீங்க.. ரசிகர்களிடம் மண்டியிட்ட விராட் கோலி!

”இப்படிப்பட்ட இந்தியர்களும் இருக்கிறார்கள்”

வீடியோ மூலம் சர்ச்சை கருத்தை கூறி விமர்சனத்திற்கு உள்ளான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது அது குறித்த விளக்கத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கோலியின் விளக்கம்:

ஒரே ஒரு வீடியோ விராட் கோலியை இப்படி சுற்றி சுற்றி  அடிக்கும் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதுவரை  ஆங்கிரி பேட், சண்ட கோலி என பெயர் வாங்கிக்கொண்டிருந்த விராட்  கோலி நேற்று முன் தினம் வெளியிட்ட வீடியோ மூலம்  ’போங்கு விராட் ’என்றும் பெயர் வாங்கி விட்டார்.

ஆம்,  இந்திய  கிரிக்கெட்  ரசிகர் ஒருவர்   வெளிநாட்டு பேட்ஸ்மேன்களை  ரசித்து கருத்து ஒன்றை பதிவிட்டார். இதனால் கோபமுடைந்த விராட் கோலி அந்த ரசிகருக்கான பதிலை  வீடியோ மூலம் கூறினார். அதிலும் குறிப்பாக ”இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு செல்” என்று காட்டமாக கூறினார்.

விராட்டின் இந்த பதிலுக்கு அனைவரும் புகழ்ந்து தள்ளுவார்கள் என்றே பலரும் எதிர்பார்த்து இருப்பார்கள். ஆனால் நடந்ததோ எதிர்மறை.. ”நாங்கள் வெளிநாட்டு  பேட்ஸ்மேன்களை ரசித்தால் தவறு, நீங்கள் ரசித்தால் ரோல் மாடலா”? என்று  ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

வீணாக வாயை விட்டு சிக்கலில் மாட்டிக் கொண்ட கதையாய் ஆனது விராட்டின் நிலைமை.   கூடவே, 2008 ஆம் ஆண்டு விராட் கோலி தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என்று தென்னாப்பிரிக்காவை சேர்ந்த  ஹர்சல் கிப்ஸ் பெயரின் கூறிய வீடியோவை ட்விட்டரில் ரசிகர்கள் பதிவிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம்,  வேகமாக படையெடுக்க, இதற்கு முற்றுப்புள்ளி  வைக்கும் முடிவில் விராட்  இதற்கான பதிலை  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விராட் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, “ ரசிகர்கள் என்னை விமர்சனம் செய்யவில்லை என்றே நான் நினைக்கிறேன். என்னை விமர்சனம் செய்தால் அதோடு நானும் இணைந்துகொள்வேன்.  ஆஹா ஆஹா.. நான் பேசிய வீடியோ என்பது, ‘இப்படிப்பட்ட இந்தியர்களும்’ இருக்கிறார்கள் என்று காட்டுவதற்கு மட்டும் தான்

என்னைப் பொறுத்தவரை எந்த நாட்டு கிரிக்கெட் வீரரை யாரும் ரசிக்கலாம். அதில் தேர்வு செய்வதில் நான் சுதந்திரம் இருப்பதை விரும்புபவன். நான் பேசியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பண்டிகை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். அனைவருக்கும் அன்பும், அமைதியும் கிடைக்கட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close