இதுதான் உண்மையான “தவமாய் தவமிருந்து” : கர்ப்பிணி மனைவிக்கு இருக்கையான கணவன்…
Husband becoming chair to pregnant wife : கர்ப்பிணி மனைவிக்கு தனது முதுகையையே இருக்கையாக மாற்றி கணவன் அமர வைத்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
கர்ப்பிணி மனைவிக்கு தனது முதுகையையே இருக்கையாக மாற்றி கணவன் அமர வைத்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தன் கணவன், தன்னை எப்போதும் தன் உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள். அத்தகைய கணவன் – மனைவி எல்லோருக்கும் எளிதில் அமைந்தும்விடுவதில்லை.
இதனை பொய்ப்பிக்கும் விதமாக, சீனாவில் மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி மனைவிக்கு யாரும் உட்கார இருக்கை தரவில்லை. இந்நிலையில், கணவனே, தரையில் உட்கார்ந்து, தனது முதுகையே இருக்கையாக மாற்றி அதில் மனைவியை உட்கார வைத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கணவன் – மனைவி உறவுக்கு இந்தியாவையே, உலக நாடுகள் எடுத்துக்காட்டாக கொண்டுள்ள நிலையில், சீனாவில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. கணவன் – மனைவி இருவரிடையே உள்ள பரிபாசத்தை வெளிஉலகுக்கு காட்டுவதாக அமைந்துள்ளது.