1 வாரம் ப்ளான் போட்டு நகையை திருடிய திருடன்: இறுதியில் போலி நகையான துயரம்!

திருடனின் முகம் சிசிடிவில் சரியாக தெரியவில்லை என்றாலு, இந்த திருடன் சீனா முழுவதும் பிரபலமாகியுள்ளான்.

சீனாவில் நகைக்கடையில் திருடன் 1 வாரம் ப்ளான் போட்ட திருடனுக்கு இறுதியில் ஏமாற்றமே மிச்சம்.

இந்த சம்பவம் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் பிரபல நகைக்கடையில் கோடிக்கணக்கான ஆபரணங்கள் மற்றும் தங்கக்கட்டிகள் இருக்கும் கடையில்  த்கிருடன் ஒருவன் நகைகளை திருடன் திட்டமிட்டுள்ளான். இதற்கு சுமார் 1 வாரமாக அந்த பகுதியில் சுற்றித்திரிந்த திருடன் இறுதியாக கடந்த வாரம் இரவு நகைக்கடைக்குள் புகுந்துள்ளான்.

கடையின் பின்புறம், பெரிய துளை போட்டு திருடன் கடைக்குள் புகுந்திருக்கான். அதன் பின்பு அங்கு வைக்கப்பட்டிருந்த 5 பெட்டியில் தங்கக்கட்டிகள் இருந்துள்ளது. இதை திருடன், எடுத்துக் கொண்டு மிகுந்த சந்தோஷத்துடன் சென்றுள்ளான். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

மறுநாள் காலை, கடைக்கு வந்த உரிமையாளர் 5 பெட்டிகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின்பு, சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். ஆனால், இந்த சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கவில்லை.

நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு, கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியப் பின்பு தான், திருடன் திருடிய அனைத்து போலினாவை என்றும், பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த போலி தங்கக் கட்டிகள் என்று தெரிய வந்துள்ளது.அந்த திருடனின் முகம் சிசிடிவில் சரியாக தெரியவில்லை என்றாலு, இந்த திருடன் சீனா முழுவதும் பிரபலமாகியுள்ளான்.

×Close
×Close