scorecardresearch

குழந்தை படுத்திருந்த பெட்டுக்கு அடியில் நாகப் பாம்பு: கோவையில் அதிர்ச்சி

கோவையில் உள்ள வீடு ஒன்றில் குழந்தை படுத்திருந்த பெட் அடியில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

In Coimbatore a cobra was found under the bed where the child was lying
பெட் அடியில் கண்டெடுக்கப்பட்ட நாகப் பாம்பு

கோவை மாநகர் போத்தனூர், குறிச்சி ஆகிய பகுதிகளில் தற்போது அடிக்கடி பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் அதிகமாக தென்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன் போத்தனூர் பகுதியில், பூந்தொட்டிக்கு அடியில் ஒரு நாகப்பாம்பு பிடிபட்டது. அதனைத் தொடர்ந்து மழையில் ஒரு வெள்ளை நிற நாகம் பிடிப்பட்டது.

அப்பகுதியில் அடிக்கடி பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் போத்தனூர் பகுதியில் ஒரு வீட்டில் குழந்தையை தரையில் போட்டிருந்த பெட்டில் படுக்க வைத்து விட்டு குழந்தையின் தாயார் பெட்டை சிறிது இழுத்துள்ளார்.

அப்போது பெட்டிற்கு அடியில் இருந்து பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் குழந்தையை உடனடியாக அங்கிருந்து எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைக்கு தகவல் அளித்து, அங்கு வந்த பாம்புபிடி வீரர் மோகன் லாவகமாக அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள பாம்புகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: In coimbatore a cobra was found under the bed where the child was lying