என்ன ஒரு கம்பீரம்... மனிதர்கள் மத்தியில் நடந்து செல்லும் சிங்கங்கள்! மிரட்டல் வீடியோ.

இன்னும் ஓயவில்லை தொடர்ந்து ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பான சாலைப் போக்குவரத்துக்கு நடுவே 4 சிங்கங்கள் கம்பீரமாக பவனி செல்லும் வீடியோ இணையவாசிகளை புரட்டிப் போட்டுள்ளது.

பவனி செல்லும் சிங்கங்கள்:

தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள க்ரூகெர் தேசிய வனவிலங்குப் பூங்காவை ஒட்டி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவிற்கு செல்பவர்கள் இந்த வழியாக தான் செல்ல வேண்டும்.

எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் சில தினங்களுக்கு முன்பு சிங்கங்கள் கம்பீர பவனி சென்றுள்ளனர். 4 சிங்கங்கள் ராஜ நடைப்போட சிங்கங்களுக்கு பின்னால் சாலையில் நிற்கும் கார்கள் மெதுவாக நகர்ந்தனர்.

இந்த காட்சியை கண்டு திகைத்து நின்ற வாகன ஓட்டிகள் பலர் அதை அப்படியே வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டனர், இணையத்தில் அந்த வீடியோ 2 மில்லியன் பார்வையாளர்களை சொந்தமாக்கியுள்ளது. இன்னும் ஓயவில்லை தொடர்ந்து ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.

4 சிங்கங்கள் கம்பீர பவனி வரும் காட்சி காண்போர்களை மிரள வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ:

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close