/indian-express-tamil/media/media_files/2025/09/22/ind-vs-pakistan-rauf-2025-09-22-12-38-02.jpg)
இந்தியா 172 ரன்கள் இலக்கைத் துரத்தி வெற்றிகரமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 39 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிச்கர்களுடன் 74 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிப் பாதைக்கு அடித்தளம் அமைத்தார். Photograph: (Image source: @vlp1994/X)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 போட்டியின்போது, மைதானத்திற்கு வெளியே நடந்த சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தின் கவனத்தை ஈர்த்தது.
இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப், இந்திய ரசிகர்கள் இருந்த பகுதிக்கு அருகில் ‘ஃபீல்டிங்’ செய்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள், “கோலி-கோலி” என்று கோஷமிட்டு அவரை சீண்டினர்.
இந்த வைரல் காணொலி சமூக ஊடகங்களில் 2022 டி20 உலகக் கோப்பையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த மறக்க முடியாத மோதலை நினைவூட்டியது. அந்தப் போட்டியில், விராட் கோலி, ஹாரிஸ் ரவுஃபின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை அடித்து மிரட்டினார்.
Indians chanting KOHLI KOHLI after seeing Haris Rauf 🤣🤣🤣#INDvPAK#AsiaCup2025pic.twitter.com/zL7cRbopQM
— Vinesh Prabhu (@vlp1994) September 21, 2025
ஆனால், ராஃப் ரசிகர்களின் கோஷத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஒரு சைகையைச் செய்தார். ஒருவேளை, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலைக் குறிப்பிடும் விதமாக அவர் இவ்வாறு செய்திருக்கலாம். தொடர்ந்து ரசிகர்கள், “கோலி-கோலி” என்று கோஷமிட்டபோதும், ராஃப் அவர்களை உற்சாகப்படுத்தினார். சைகை மூலம் “இன்னும் சத்தமாக!” என்று கூறினார்.
WATCH: Harris Rauf was instigating Indian fans during the India vs Pakistan match
— Sensei Kraken Zero (@YearOfTheKraken) September 21, 2025
He was gesturing with his hands that planes have crashed.
This disgusting and incompetent player was also chanting 6-0 during practice sessions. pic.twitter.com/zhwQGhYHEZ
பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஃப், 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும், அவரது சிறப்பான ஆட்டம் பாகிஸ்தான் அணியின் தோல்வியைத் தடுக்கவில்லை. இந்தச் சம்பவத்தின் காணொலிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தக் காணொலிக்குக் குவிந்த கமெண்டுகளில், ஒருவர் “கோலி என்ற பெயரைக் கேட்டவுடன் கோமாளித்தனமான குணங்கள் வெளிப்படுகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொரு பயனர், “பாகிஸ்தான் இன்னும் ஆபரேஷன் சிந்தூர் (operation sindoor) விளைவுகளிலிருந்து வெளியே வரவில்லை” என்று எழுதினார்.
இதற்கிடையில், இந்தியா 172 ரன்கள் இலக்கைத் துரத்தி வெற்றிகரமாக சேஸ் செய்தது. அபிஷேக் ஷர்மா 39 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அணிக்குத் தலைமை தாங்கினார். இதில் ஆறு பவுண்டரிகளும் ஐந்து சிக்சர்களும் அடங்கும். தொடக்க ஆட்டக்காரரான அவரது இணை சுப்மன் கில், 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்துச் சிறப்பாக ஆடினார். இதில் எட்டு பவுண்டரிகள் அடங்கும். பின்னர், திலக் வர்மா 19 பந்துகளில் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குறிப்பாக, அபிஷேக் ஷர்மா ஒரு டி20 போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து இரண்டு முறை சாதனை படைத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றை உருவாக்கினார். இந்தப் போட்டியில், அவர் பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அப்ரிடியின் முதல் பந்தில் சிக்சர் அடித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.