கேரளாவிலும் கொரோனா விழிப்புணர்வில் ரஜினி: மாஸ்க் போடாதவர்களை பந்தாடும் வீடியோ!

Covid Awareness Kerala : கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கேரளா போலீசார் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Covid Awareness Kerala : கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கேரளா போலீசார் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
கேரளாவிலும் கொரோனா விழிப்புணர்வில் ரஜினி: மாஸ்க் போடாதவர்களை பந்தாடும் வீடியோ!

இந்தியாவில் கொரோனா கொரோன தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவுக்கு பல வெளிநாடுகளும் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர்.

Advertisment

மேலும் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் இரவு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வரவேண்டாம் என்றும், அப்படியே வெளியில் வந்தாலும், முக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் மற்றும் திரையுலக பிரமுகர்கள் என பலரும் பொதுமக்களுக்குவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுபட்டு வருகின்றனர். இதில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் முக்கிய மாநிலங்களில் ஒன்றான கேரளாவில், காவல்துறையினர் பொதுமக்களுக்கு வித்தியாசமாக முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழில் ஹிட் பாடலான எஞ்ஜாய் எஞ்சாமி என்ற பாடலுக்கு காவல்துறையினர் அசத்தலாக நடனமாடி விழிப்புணவை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது.

இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினி நடிப்பில் வெளியான பாபா படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சியை வைத்து மாஸ்க் அணியவில்லை என்றால் என்னவாகும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள வீடியோ கேரளா காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த படத்தில் நடிகர் ரஜினி நடிகர் ரிஷியுடன் கைபந்தை வைத்து சண்டை போடும் காட்சியை மாஸ்க் விழிப்புணபுர்வுக்காகவும், தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுடன் பேசும் வசத்தை ஆரோக்கியமாக இருப்பதற்கு விழிப்புணர்வாகவும் பயன்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணைத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தங்களது உயிரை பணையம் வைத்து களப்பணியாற்றும் காவல்துறையினர், இந்த போன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறித்து பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: