New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/rohit-sharma.jpg)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா ஹர்பஜன் சிங் சைகையில் பந்து வீசியது களத்தில் சிரிப்பை ஏற்படுத்தியது.
இரண்டாவது கட்டத்தின் இறுதி ஓவரில் ரோகித் ஷர்மா பந்து வீச அழைக்கப்பட்டார். 32 வயதான ஹர்பஜன் சிங்கின் சைகையுடன் ரோகித் பந்துவீசத் தொடங்கினார். இதனையடுத்து, ஆட்டத்தில் சிறிது நேரம் சிரிப்பொலி எழுந்தது.ரோகித் சர்மா இரண்டு ஓவரில் வீசி, 7 ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார்.
Rohit Sharma imitating Bhajji's Action on the last ball before Tea ????@ImRo45 • @harbhajan_singh pic.twitter.com/MhsQxPbJcc
— Saish ???? (@CricketSaish45) February 6, 2021
???????????? @ImRo45 shana ???????????? https://t.co/1sUKxwCuQT
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 6, 2021
இந்த வீடியோவை ஹர்பஜன் சிங்கும் தனது ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய ஆட்டநேர முடிவில், இஙகிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 555 ரன் குவித்தது. கேப்டன் ஜோ ரூட் 377 பந்துகளில் 19 பவுண்டரி 2 சிக்சருடன் 218 ரன் குவித்து ஆட்டமிழந்தார்
இந்திய அணி அணி தரப்பில், அஸ்வின் , பும்ரா, இஷாந்த் சர்மா, நதீம் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். ஆஸ்திரேலிய தொடரில் பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி இந்த போட்டியில் பந்துவீச்சில் கோட்டை விட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
2ம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணியின் டாம் பெஸ் 28* (84), மற்றும் ஜாக் லீச் 6* (28) களத்தில் உள்ளனர். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு வலுவான ஒரு ஸ்கோர் உள்ளதால், பாலோ – ஆன் கொடுக்குமா அல்லது 3 வது ஆட்ட நேரத்தில் களத்தில் உள்ள வீரர்களைக் கொண்டு தொடருமா என்று நாளை தான் தெரிய வரும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.