இவ்வளவு கூலான மனிதரா விராட் கோலி? சண்டை கோழி கேப்டனை இனிமேல் பார்ப்பது கஷ்டம் போல!

விராட் கோலியின் நடவடிக்கை முற்றிலும் மாறி காணப்படுகிறது.

விராட் கோலியின் நடவடிக்கை முற்றிலும் மாறி காணப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india vs new zealand highlights

india vs new zealand highlights

india vs new zealand highlights : இந்தியன் கேப்டன் விராட் கோலிக்கு அதிகமான செல்லப்பெயர்கள் உண்டு. அதில் பெரும்பாலான ரசிகர்கள் குறிப்பிடுவது சண்ட கோழி விராட் என்பதை தான். கோலி, அனைத்து வித ஃபார்மெட்களிலும் கலக்கி வரும் நபர் ஆவார். மிக ஆக்ரோஷமான ஆட்டத்தைக் கொண்ட கோலியிடம் அடிக்கடி கடுமையான கோபம் வெளிப்படும்.

Advertisment

வெறித்தனமான ஆட்டத்தில் கோலி பல்வேறு சாதனைகளை செய்தாலும், நம்பர் ஓன் பேட்ஸ் மேன் என்ற லிஸ்டில் இடம்பிடித்தாலும், அவரின் கோபத்தை விமர்சிக்காத உலக பேட்ஸ்மேன்களே இல்லை எனலாம்.

கோலி தனது கோபத்தை மட்டும் அரங்கத்தில் கட்டுப்படுத்தினால் அவரின் பெயர் எங்கையோ போய்விடும் என்பது தான் அவரை அருகில் இருந்து பார்த்த பயிற்சியாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

Advertisment
Advertisements

கோலி, தவறான முடிவுகள் கொடுத்த அம்பயர்களை மைதானத்திலேயே முறைத்த சம்பவங்கள் எல்லாம் நிறைய உண்டு. ஆனால் உலகக்கோப்பை தொடரில் விராட் கோலியின் நடவடிக்கை முற்றிலும் மாறி காணப்படுகிறது.

பயிற்சி ஆட்டம் தொடங்கி நேற்று நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது வரை கோலி மிகவும் கூலாகவே வலம் வந்தார்.நியூசிலாந்து வீரர்களின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய போது ஆட்டம், மைதானத்தில் ஒரே புன்சிரிப்பு என கோலியின் எக்ஸ்பிரஷன்கள் மட்டும் கேமரா மேன்களால் அடிக்கடி ஒளிப்பரப்பட்டது.

உலகக்கோப்பை போன்று அதிகம் பிரஷர் நிறைந்த போட்டியில் கேப்டன் விராட்கோலி இவ்வளவு பொறுமையாக நிதானமாக கூலாக வலம் வந்தது அவரின் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. அப்ப இனிமேல் சண்ட கோழி விராட் கோலியை பார்க்க முடியாதுபோல.

India Vs New Zealand Virat Kohli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: