இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் செய்த டிக்டாக் டான்ஸ் வீடியோ ஒன்று சூறாவளியாக வைரலாகிவருகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் வேறு பாடல்களின் இசையை சேர்த்து நகைச்சுவையுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்ட சுழற்பந்து வீச்சாலர் யுஸ்வேந்திர சாஹல் கிரிக்கெட் விளையாடுவதோடு மட்டுமல்லாமல் டுவிட்டர், டிக்டாக், போன்ற சமூக ஊடகங்களிலும் அவ்வப்போது பதிவுகளிட்டு வருகிறார்.
தற்போது யுஸ்வேந்திர சாஹல் டிக்டாக் செய்து டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஒரு டான்ஸ் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் சூறாவளி போல வைரலாகிவருகிறது.
சாஹல் தனது டுவிட்டர் பக்கதில், Off field performance on point ???? என பதிவிட்டுள்ள இந்த வீடியோவில் அவருடன் சேர்ந்து 3 இளைஞர்கள் டிக்டாக் செய்து உள்ளனர். அதில் ஒருவர் முகத்தை மறைத்த படி நடனமாடுகின்றார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களில் ஒருவர் ஆமா..ரோஹித் சர்மா எதுக்கு முகத்தை மறைத்திருக்கின்றார் என கேட்டுள்ளார்.
ஏதாவது ஒன்று கிடைத்தால் வைரலாக்கிவிடும் இந்த நெட்டிசன்கள் சாஹலின் டிக்டாக் வீடியோவுக்கு வேறு பாடல்களை பின்னணியில் ஒலிக்கச் செய்து நகைச்சுவையாக்கி பகிர்ந்து வருகின்றனர்.