குல்தீப் யாதவ் பந்தில் இருக்கும் மேஜிக்..மீண்டும் வரலாறு படைக்க காரணமான விக்கெட் வீடியோ!

50 ரன்கள் எடுப்பதற்குள்ளே முதல் விக்கெட் எடுக்கப்பட்டது.

india vs Pakistan highlights
india vs Pakistan highlights

india vs Pakistan highlights: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் ஆறு முறை மோதி ஆறிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று ஏழாவது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது இந்திய அணி.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்றது. ரசிகர்களின் எதிர்பார்பை அதிகமாகவே பூர்த்தி செய்யும் வகையில் இருந்தது இந்த ஆட்டம். இந்திய அணி உலகக் கோப்பையில் மீண்டுமொருமுறை பாகிஸ்தானிற்கு எதிராக வென்று வரலாற்றை தொடர்ந்து நீட்டித்துள்ளது.

337 என்ற கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் மிடில் ஓவரில் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது பந்துவீச்சால் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறியது பாகிஸ்தான். குறிப்பாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அஸாம் 48 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்தார். அதனைத் தொடர்ந்து பஃகர் ஜமானும் 68 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்தில் இருக்கும் மேஜிக் பாகிஸ்தான் வீரர்களை அசரடித்தது. எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுக்கள் இந்திய அணியின் பலத்தை மேலும் கூட்டியது.

பாகிஸ்தானுக்கு எதிராக முதல் விக்கெட் எடுத்த விஜய் சங்கரை விராட் கோலி அரங்கத்தில்யே கட்டியணைத்து பாராட்டினார். பாகிஸ்தான் அணி பீல்டிங் செய்யும் போது இந்திய அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்த அவ்வளவு சிரமப்பட்டது. இந்திய அணி 100 ரன்களை கடந்த பின்பு தான் முதல் விக்கெட் எடுக்கப்பட்டது.

read more.. பாதியில் காணாமல் போன புவனேஸ்வர் குமார்.. அடுத்த போட்டியிலாவது இருப்பாரா?

ஆனால், பாகிஸ்தான் அணி ஆடும் போது 50 ரன்கள் எடுப்பதற்குள்ளே முதல் விக்கெட் எடுக்கப்பட்டது. அந்த பெருமையையும் விஜய் சங்கரையே சேரும். இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோல்வியடையாத வரலாற்று சாதனையை இந்தியா தன்வசமே தக்கவைத்து கொண்டது.

தொடர்ந்து ஏழாவது முறையாக பாகிஸ்தானை வென்ற இந்தியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த மகிழ்ச்சி தருணத்தில் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் சிறப்பு வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு..

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India vs pakistan highlights kuldeep yadavs magical delivery

Next Story
வந்தாரை வாழ வைத்த சென்னைக்கே இந்த நிலைமையா? கடைசியில் நாங்க எங்க போவோம்! நெட்டிசன்களின் குமுறல்.Chennai Water Scarcity
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com