இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் 6-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய அளவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக, இந்திய விமானப் படை விரர்கள் மெரினாவில் செய்த ‘ஏர் ஷோ’ ஒத்திகை நிகழ்ச்சியை உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையில் நின்று கண்டு களித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் 6-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய அளவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அக்டோபர் 6-ம் தேதி மெரினாவில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் 72 விமானங்கள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, செப்டம்பர் 28-ம் தேதி மற்றும் அக்டோபர் 1-ம் தேதி இந்திய விமானப் படை விமானங்களின் வான் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் மூன்றாவது நாளாக இன்றும் (அக்டோபர் 2) இந்திய விமானப் படை வீரர்களின் ‘ஏர் ஷோ; ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மெரினா கடற்கரையில், இந்திய விமானப்படை வீரர்களின் ஏர் ஷோ ஒத்திகை நிகழ்ச்சிக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில், இந்த ‘ஏர் ஷோ’ ஒத்திகை நிகழ்ச்சியைக் காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் மக்கள் அதிக அளவில் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தனர்.
வானத்தில் ஹெலிகாப்டெர் பறந்துகொண்டிருக்கும்போது, ஹெலிகாப்டரில் இருந்து வீரர்கள் கயிறுகள் மூலம் இறங்குவது, எதிரிகளுடன் எப்படி சண்டையிடுவது போன்றவற்றை ஒத்திகை செய்தனர். இதை மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் உச்சி வெயிலையும் பொருட்படுத்தால் கண்டு களித்தனர்.
இந்திய விமானப்படை வீரர்கள், ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருக்கும்போது கயிறு மூலம் இறங்குவது, எதிரிகளுடன் சண்டையிடுவது, பராசூட் பயனபடுத்துவது போன்ற ஏர் ஷோ ஒத்திகை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
IAF Il-78 tanker with two fighter jets over Chennai. Air show rehearsals underway. #iaf #airshow #chennai https://t.co/GH2GA8SYHe pic.twitter.com/IfvAR8pGk2
— VOMMspotter (@VinTN) October 2, 2024
சென்னை மெரினா கடற்கரையில், அக்டோபர் 6-ம் தேதி எலைட் ஆகாஷ் கங்கா ஸ்கை டைவிங் குழு, சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம் மற்றும் சாரங் ஹெலிகாப்டர் டிஸ்ப்ளே டீம் ஆகியவை ஸ்டண்ட் நிகழ்ச்சிகளை செய்யும் என்றும் சுமார் 15 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.