Advertisment

தந்தையை இழந்த பெண்ணுக்கு விசா மறுப்பு; இந்திய தூதரகத்தில் மோசமாக நடந்து கொண்ட அதிகாரி

இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் பல்வேறு தருணங்களில் மிகவும் மோசமாக இந்திய அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளனர் என்று தங்களின் கருத்துகளை பலரும் பதிவு செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Indian consulate officer screams at visa applicant

Indian consulate officer screams at visa applicant : இந்தியாவில் இருக்கும் தன்னுடைய தந்தை இறந்த நிலையில் இறுதிச் சடங்கிற்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் மிகவும் மோசமான வகையில் நடந்து கொண்டார் இந்திய அதிகாரி. அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியா வர விரும்பிய பெண் ஒருவருக்கு விசா வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பிய போது பதில் சொல்ல மறுத்த இந்திய அதிகாரி அந்த பெண்ணைப் பார்த்து கத்தியதோடு மட்டுமின்றி உங்களின் பணம் இதோ, எடுத்துக் கொண்டு வெளியே செல்லுங்கள். உங்களுக்கு விசா கிடையாது என்று பேசியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Advertisment

நடிகரும் ஊடக கருத்தரங்கங்களை வழங்கும் வர்ணனையாளருமான சிமி கார்வல் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்து அவரின் நடவடிக்கை கொஞம் கூட ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய வெளியுறவுத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் மோடியின் ட்விட்டர் ஹேண்டில்களை டேக் செய்து உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் சிமி.

இந்தியர்களின் தேவையை பூர்த்தி செய்து அவர்களுக்கு சேவை செய்வதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர் அவர். அவர் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று மற்றொரு ட்விட்டர் பயனர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த விவகாரத்தை நாங்கள் தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்து தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கின்றோம் என்று அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இதற்கு பதில் அளித்துள்ளது. மேலும் அவரின் நடத்தை பொதுதொடர்பு விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பிரதிபலிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் பல்வேறு தருணங்களில் மிகவும் மோசமாக இந்திய அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளனர் என்று தங்களின் கருத்துகளை பலரும் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களில் தாங்கள் பெற்ற நல்ல அனுபவங்களையும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment