இந்திய அணியில் இடம்பெற்றுள்ள கணவர்களை உற்சாகப்படுத்த கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் அனைவரும் அரங்கத்திற்கு வந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதி டி20 போட்டி இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 18.4வது ஓவரில், 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியை நேரில் காண தோனியின் மனைவி சாக்ஷி , செல்ல மகள் ஜிவாவுடன் சென்றிருந்தார்.
அதே போல், ஆஷிஷ் நெஹ்ராவின் மனைவி ருஷ்மா, ஷிகார் தவானின் மகள்கள் அலியா, ரியா, குருனால் பாண்டயாவின் மனைவி பன்குரி சர்மா, கேப்டன் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரும் அரங்கத்திற்கு நேரில் வருகை தந்திருந்தனர். அரங்கத்தில் அமர்ந்தப்படி இவர்கள் அனைவரும் இந்திய அணி விளையாடும் நேரத்தில் கைகளை தட்டியும், விசில் அடித்தும் உற்சாகப்படுத்தினர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக விராட்- அனுஷ்கா ஜோடியை பொருத்தவரையில் கோலியின் ஒவ்வொரு போட்டியிலும் அனுஷ்கா மறக்காமல் கலந்துக் கொள்வார். ராசி, விமர்சனம் என பல்வேறு கருத்துக்கள் இந்த ஜோடி மீது சுமத்தப்பட்டாலும் இவை எதையுமே கண்டுக்கொள்ள இந்த ஜோடி வழக்கம் போல் ஒருவரைரொருவர் கட்டிப் பிடித்து தங்களது காதலை அரங்கத்திலியே பகரிந்துக் கொண்டனர்.
இந்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.