டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உடையணிந்த ஒரு குழந்தையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பேபி கெஜ்ரிவால் என்று குறிப்பிடப்பட்டு வைரலாகியுள்ளது.
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி ஐ.டி.ஓ தலைமையகத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர் தஷி தோப்கியால் எடுத்த இந்த புகைப்படத்தில் ஒரு சிறுவன் மையில் வரைந்த மீசை, கண்ணாடி, கெஜ்ரிவாலின் பிரபலமான குளிர்கால உடையுடன் தோறமளிக்கிறான். இந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டவுடன் பலரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவனை ‘பேபி கெஜ்ரிவால்’ என்று கூற உடனடியாக வைரலானது.
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் குட்டி கெஜ்ரிவாலின் புகைப்படம் பதிவிடப்பட்டது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க தொடங்கியுள்ள நிலையில், பலர் சமூக ஊடகங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு‘குட்டி கெஜ்ரிவால்’ படத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மட்டும் மக்களின் இதயங்களைக் கவரவில்லை இந்த பேபி கெஜ்ரிவாலும் மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"