Advertisment

எங்க கண் முன்னாடியே குடிக்கிறீயா? இளம்பெண்ணுக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை! குவியும் பாராட்டுக்கள்.

அவர்கள் ஒருமுறை தவறினால் கூட விளைவு வேற மாதிரி இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian girl drinks viral video

Indian girl drinks viral video

Indian girl drinks viral video : அமெரிக்காவில் பெற்றோர் கண்முன்னே மதுகுடித்த மகளை பார்த்து, அவருடைய பெற்றோர் மகளுக்கு கொடுத்த தண்டனை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்தியாவை பொறுத்தவரை பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சிறு வயதில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பார்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா குழந்தை வளர்ப்பில் சிறந்து விளங்குவதாக அண்மையில் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டது.

சமூகத்தில் இப்போது அரங்கேறி வரும் குற்றங்கள், நவீன கலாச்சாரங்கள், தவறு என்று தெரியாமலே அதை பழகிக் கொள்ளும் தீய செயல்கள் ஆகியவை எதிர்கால சங்கத்தினரை நினைத்து நம்மை கவலையடைய செய்கிறது. அதே நேரம், வளரும் பயிரை விதையிலே உற்று நோக்க வேண்டும். அப்படி கவனிக்க தவறினால் விதை வளர்ந்து செடிவாதற்குள் அதை பூச்சிகள் பிடிக்கவும் வாய்ப்புண்டு.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காலை எழுவதில் இருந்து இரவு உறங்குவது வரை சில கட்டுபாடுகளை வைத்திருப்பார்கள். அந்த கட்டுபாடுகளை அவர்கள் ஒருமுறை தவறினால் கூட விளைவு வேற மாதிரி இருக்கும்.

அப்படித்தான் தனது பெண்ணை ஒழுக்கம், கட்டுபாடுடன் வளர்த்த பெற்றோர், தனது மகள் தங்கள் கண் முன்னே மது அருந்துவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவருக்கு தகுந்த தண்டனை வழங்கியுள்ளனர். அவர்களின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அப்படி என்ன தண்டனை?

மிஷா மாலிக் என்கிற இளம்பெண் ஒருவர் அமெரிக்காவில் தன்னுடைய பெற்றோருடன் தங்கிருந்தார். மிஷா மாலிக் பிறந்து வளர்ந்த இடம் இந்தியா தான். தந்தையின் வேலை காரணமாக குடும்பத்துடன் அங்கு சென்றிருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மிஷா தனது பெற்றோருடன் அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கு அவர், தனது தாய் மற்றும் தந்தை கண்முன்னே மது அருந்தினார்.

இதை சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத மிஷா பெற்றொர் அதிர்ச்சி அடைந்தனர். குடிக்க ஆரம்பிக்கும்போதே மிஷா மாலிக்கின் தாய் வேண்டாம் என மீண்டும் மீண்டும் கூறி இருக்கிறார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மிஷா குடித்து உள்ளார். இதனால் கோபமடைந்த பெற்றோர், மிஷாவை மறுநாளே டிக்கெட் எடுத்து இந்தியாவுக்குய் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த வீடியோவை மிஷா மாலிக்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ நேற்று இரவு முதல் இணையத்தில் வைரலாகி உள்ளது. மிஷாவின் பெற்றொர் மகளுக்கு கொடுத்த தண்டனைக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment