பெரியசாமி மதியழகன் (47 வயது) கடந்த ஆண்டு தவறுதலாக தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட சிங்கப்பூர் டாலர் 25,000 (சுமார் ரூ. 16 லட்சம்) திருப்பித் தராததற்காக சிங்கப்பூரில் 9 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் வெளியிட்டுள்ள செய்திப்படி, மதியழகன் அது அவருடைய பணம் அல்ல என்று தெரிந்திருந்தும், அந்த பணத்தில் ஒரு பகுதியை தனது கடனை அடைக்க பயன்படுத்தினார், மீதியை இந்தியாவில் உள்ள தனது குடும்பத்திற்கு அனுப்பினார்.” என்று குறிப்பிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Singapore court sentences Indian man to jail for spending Rs 16 lakh deposited to his account by mistake
இந்த வழக்கு சமீபத்தில் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் சென்றபோது, நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதை மதியழகன் ஒப்புக்கொண்டார். ஏப்ரல் 6, 2023 அன்று, பிளம்பிங் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த மதியழகன் 2021-2022 இல் பணிபுரிந்த நிர்வாகி, தனிநபர் கடனை அடைப்பதற்காக நிறுவனத்திற்கு அனுப்புவதாக நினைத்து பணத்தை அவரது கணக்கிற்கு மாற்றினார்.
பணப் பரிமாற்றத்திற்குப் பிறகு, அந்த நிறுவனத்துடன் கணக்கு இணைக்கப்படவில்லை என்றும் அவர்கள் பணத்தைப் பெறவில்லை என்றும் ஒரு நிறுவன இயக்குநர் மூலம் அந்தப் பெண்ணுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஸ்டேட் பிராசிகியூட்டிங் அதிகாரி (SPO) கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது: “தவறான பரிமாற்றம் செய்த பிறகு, புகார்தாரருக்கு (நிறுவனத்தின் இயக்குநர்) கணக்கு நிறுவனம் மற்றும் நிறுவனத்திற்கு சொந்தமானது அல்ல என்று அன்றே தெரிவிக்கப்பட்டது. பணத்தைப் பெறவில்லை.
தவறான கணக்குக்கு பணம் செலுத்தியதை உணர்ந்த அந்த பெண் உடனடியாக தொடர்பு கொண்டார்.
நிதியை மீட்பதற்கான உதவிக்காக மதியழகனின் வங்கி, நான்கு நாட்களுக்குப் பிறகு, அவரது கடைசியாக அறியப்பட்ட முகவரிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது, அது நிறுவனத்தின் முகவரியும் கூட, என்ன நடந்தது என்பது குறித்து அவரை எச்சரித்து, தொகையைத் திருப்பித் தருமாறு கேட்டது.
ஒரு மாதத்திற்குப் பிறகு, பணத்தைத் திரும்பக் கொடுக்க மதியழகன் மறுத்ததாக அந்த பெண்ணிடம் வங்கி கூறியது, அதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், மதியழகன் தவறு பற்றி அறிந்திருந்தார், மேலும், மே 2023-ல் பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றினார்.
மதியழகன், மே மாதம், தனது கடனை அடைக்க பணத்தைப் பயன்படுத்தியதாக நிறுவனத்தின் இயக்குநரிடம் ஒப்புக்கொண்டார். நவம்பர் 2023-ல் அவர் காவல்துறையிடம் பேசியபோது, அந்தப் பணத்தை தனது கடன்களுக்காகப் பயன்படுத்தியதாகவும், சிலவற்றை இந்தியாவில் உள்ள தனது குடும்பத்திற்கு அனுப்பியதாகவும் கூறினார். மதியழகன் அந்தப் பெண்ணுக்குத் திருப்பிச் செலுத்த கூடுதல் அவகாசம் கோரினார். சிங்கப்பூர் டாலர் 1,500 (சுமார் ரூ. 96,000) செலுத்துவதாக மாதாந்திர கட்டணத் திட்டத்தை பரிந்துரைத்தார், ஆனால், இதுவரை அவரிடமிருந்து பணம் எதுவும் மீட்கப்படவில்லை.
ஒரு ரெடிட் பயனர் இந்த சம்பவத்தைப் பற்றி பதிவிட்டதை அடுத்து இந்த செய்தி வைரலானது.
“தவறாக அனுப்பிய பணத்தை திருப்பித் தராததால் சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர்”
ஒரு பயனர் எழுதினார், “இந்த ஆளு எவ்வளவு கமுக்கமாக இருந்தார்? பணம் அவருக்குக் வந்தது கண்டுபிடிக்க முடியாது என்று அவர் நினைத்தாரா?
என்று கேட்டுள்ளார்.
மற்றொரு பயனர் எழுதினார், “நேர்மை என்பது அனைவரும் பார்க்கும் போது சரியானதைச் செய்வது அல்ல, யாரும் பார்க்காதபோது சரியானதைச் செய்வது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.