இந்திய கடற்படை இன்று ஐந்தாவது கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான வாகிர் கடற்படையில் சேர்க்கப்பட்டது. எதிரிகளை மிரட்டும் இந்திய நீர்மூழ்கி கப்பல் வாகிர் சீறிப் பாய்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வாகிர் நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது. இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் வாகிர் கடலில் சீறிப்பாய்ந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
இந்திய கடற்படை இன்று ஐந்தாவது கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான வாகிர் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இவ்விழாவில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியாவில் மழகான் டோக் கப்பல் கட்டும் நிறுவனத்தால் (Mazagon Dock Shipbuilders Limited (MDL) மும்பை, M/s Naval Group) பிரான்சின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இந்த வாகிர் நீர்மூழ்கிக் கப்பலுடன் சேர்ந்த்து ஐந்து கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.
முதல் வாகிர் கப்பல் நவம்பர் 1ம் தேதி1973-ல் சேர்க்கப்பட்டது. இந்த கப்பல் ஊடுருவல் தடுப்பு ரோந்து உட்பட பல பணிகளை மேற்கொண்டது. சுமார் 30 ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்த பின்னர் ஜனவரி 7ம் தேதி 2001-ல் அந்த நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டது. வாகிர் கடற்பரப்பில் ஆய்வு செய்யும் வீடியோவை இந்திய கடற்படை பகிர்ந்துள்ளது, இந்த வீடியோ உங்களை பெருமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நிச்சயமாக உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
அட்மிரல் ஆர் ஹரி குமார், அதிநவீன கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பத்துடன் கூடிய வலிமையான ஆயுதங்கள் தாங்கிய தளம் என்று வாகிர் நீர்மூழ்கி கப்பலை விவரித்தார்.
நவம்பர் 12-ம் தேதி 2020-ம் ஆண்டு கப்பல் கட்டத் தொடங்கப்பட்டு, வாகிர் என்று பெயரிடப்பட்டது. புதிய நீர்மூழ்கிக் கப்பல் வாகிர் இதுவரையில் வேகமாக குறைவான நாட்கலில் கட்டப்பட்ட நீர்முழ்கிக் கப்பல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. வாகிர் நீர்மூழ்கிக் கப்பல் பிப்ரவரி 2022-ல் தேதி தனது முதல் கடல் பயணத்தை மேற்கொண்டது. இது கடுமையான பயணங்களை மேற்கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த புதிய வாகிர் நீர்மூழ்கிக் கப்பல் டிசம்பர் 20ம் தேதி 2022-ல் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது. ஐ.என்.எஸ் வாகிர் நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவின் கடல்சார் நலன்களை மேலும் மேம்படுத்தி இந்திய கடற்படையின் திறனை அதிகரிக்கும். இந்த வாகிர் நீர்மூழ்கிக் கப்பல் கடல் மேற்பரப்பில் எதிர்ப்பு போர், நீர்மூழ்கி எதிர்ப்பு போர், உளவு சேகரிப்பு, கண்ணிவெடி மற்றும் கண்காணிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது. வாகிர் என்றால் மணல் சுறா என்று பொருள். இது அமைதி மற்றும் அச்சமின்மையக் குறிக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"