22 வயதில் உலக சாதனை; ஏ.ஐ ஸ்டார்ட்அப் மூலம் இளம் கோடீஸ்வரர்களான இந்திய வம்சாவளி பள்ளி நண்பர்கள்!

சான் பிரான்சிஸ்கோவில் 'மெர்கோர்' (Mercor)-ஐ தொடங்கிய உயர்நிலைப் பள்ளி நண்பர்களான பிரெண்டன் ஃபுடி, ஆதர்ஷ் ஹிரேமத் மற்றும் சூர்யா மிதா ஆகிய மூவரும், சமீபத்தில் 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் புதிய நிதியைப் பெற்று, தங்கள் நிறுவனத்தின் மதிப்பை 10 பில்லியன் டாலர்ர்களாக உயர்த்தியுள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோவில் 'மெர்கோர்' (Mercor)-ஐ தொடங்கிய உயர்நிலைப் பள்ளி நண்பர்களான பிரெண்டன் ஃபுடி, ஆதர்ஷ் ஹிரேமத் மற்றும் சூர்யா மிதா ஆகிய மூவரும், சமீபத்தில் 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் புதிய நிதியைப் பெற்று, தங்கள் நிறுவனத்தின் மதிப்பை 10 பில்லியன் டாலர்ர்களாக உயர்த்தியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
young three billionaires same classs

இருவரும் பள்ளியின் விவாதக் குழுவில் சிறந்து விளங்கியவர்கள். ஒரே ஆண்டில் மூன்று தேசிய கொள்கை விவாதப் போட்டிகளிலும் வென்ற முதல் இரட்டையர் இவர்கள்தான் Photograph: (Image Source: Forbes)

வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) ஆள்சேர்ப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான 'மெர்கோர்'-ன் 22 வயது நிறுவனர்கள், உலகின் இளம் சுயமாக உருவான கோடீஸ்வரர்கள் என்ற பட்டத்தை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளனர். இதன் மூலம், 2008-ம் ஆண்டில் 23 வயதில் ஃபோர்ப்ஸின் கோடீஸ்வரர் பட்டியலில் முதன்முதலில் இடம்பிடித்த மார்க் சக்கர்பெர்க்கையும் இவர்கள் விஞ்சியுள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 'மெர்கோர்'-ஐ தொடங்கிய உயர்நிலைப் பள்ளி நண்பர்களான பிரெண்டன் ஃபுடி, ஆதர்ஷ் ஹிரேமத் மற்றும் சூர்யா மிதா ஆகிய மூவரும் சமீபத்தில் 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் புதிய நிதியைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்களின் நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த பிரம்மாண்டமான மதிப்பீடு, தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) ஃபுடி, தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சி.டி.ஓ) ஹிரேமத் மற்றும் வாரியத் தலைவராக மிதா ஆகிய மூவரும் கோடீஸ்வரர் அந்தஸ்தைப் பெற உதவியது.

மெர்கோரின் இணை நிறுவனர்களில் இருவரான சூர்யா மிதா மற்றும் ஆதர்ஷ் ஹிரேமத் ஆகியோர் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ஆவர். இவர்கள் இருவரும் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள ஆண்கள் பள்ளியான பெல்லார்மைன் கல்லூரி ஆயத்தப் பள்ளியில் முதன்முதலில் சந்தித்தனர். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, இருவரும் பள்ளியின் விவாதக் குழுவில் சிறந்து விளங்கியதுடன், ஒரே ஆண்டில் மூன்று தேசிய கொள்கை விவாதப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இரட்டையர்கள் என்ற பெருமையையும் பெற்றனர்.

இரண்டாம் தலைமுறை குடியேறியவரான மிதா, தனது தனிப்பட்ட இணையதளத்தில், “எனது பெற்றோர் இந்தியாவின் புது டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறினர். நான் மவுண்டன் வியூவில் பிறந்து சான் ஜோஸில் வளர்க்கப்பட்டேன்” என்று எழுதியுள்ளார்.

Advertisment
Advertisements

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிரேமத், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிப்பதற்காகச் சென்றார். ஆனால், மெர்கோரில் முழு நேரமாகக் கவனம் செலுத்துவதற்காக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு படிப்பை பாதியில் கைவிட்டார். தனது பயணத்தைப் பற்றிப் பேசும்போது, அவர் ஃபோர்ப்ஸிடம், “என்னைப் பொறுத்தவரை மிகவும் வியப்பான விஷயம் என்னவென்றால், நான் மெர்கோருக்காக உழைக்கவில்லை என்றால், சில மாதங்களுக்கு முன்புதான் கல்லூரியில் பட்டம் பெற்றிருப்பேன். எனது வாழ்க்கை இவ்வளவு குறுகிய காலத்தில் 180 டிகிரி மாறியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

ஹிரேமத் ஹார்வர்டில் இருந்தபோது, மிதா ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுப் படிப்புகளில் இளங்கலைப் பட்டம் படித்து வந்தார். பிரெண்டன் ஃபுடியும் அதே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தைப் படித்து வந்தார். மிதா மற்றும் ஃபுடி இருவரும் ஹிரேமத் ஹார்வர்டை விட்டு வெளியேறிய அதே நேரத்தில், மெர்கோரை முழுமையாகக் கட்டமைப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஜார்ஜ்டவுனில் படிப்பை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

இந்த மூவரும் 'திலீ ஃபெல்லோஸ்' (Thiel Fellows) ஆவர். பில்லியனர் முதலீட்டாளர் பீட்டர் திலீல் (Peter Thiel) நிறுவிய இந்த அமைப்பு, ஸ்டார்ட்அப்களை உருவாக்க கல்லூரியை விட்டு வெளியேறும் இளம் தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிக்கிறது.

சில வாரங்களுக்கு முன்புதான், ஷேன் கோப்லான் (27), பாலிமார்க்கெட் (Polymarket) என்ற கிரிப்டோகரன்சி அடிப்படையிலான முன்கணிப்பு சந்தை தளத்தின் நிறுவனர், நியூயார்க் பங்குச் சந்தையின் தாய் நிறுவனமான இன்டர்காண்டினென்டல் எக்ஸ்சேஞ்ச் மூலம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டைப் பெற்றதைத் தொடர்ந்து இந்த பட்டியலில் இணைந்தார். அதற்கு முன்பு, ஸ்கேல் ஏ.ஐ (Scale AI) நிறுவனர் அலெக்ஸாண்டர் வாங் (28) 18 மாதங்களாக இந்த பட்டத்தை வைத்திருந்தார். அதே சமயம் அவரது இணை நிறுவனர் லூசி குவோ (30), டெய்லர் ஸ்விஃப்ட்டை விஞ்சி உலகின் இளம் சுயமாக உருவான பெண் கோடீஸ்வரர் ஆனார்.

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: