கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து 'விக்ரம் லேண்டர்' கருவி பிரிக்கப்பட்ட நிலையில், 'லேண்டர்' இன்றுமாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது.
உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் முதன்மையானதாக இந்தியா இருந்து வருகிறது. பொருளாதாரம், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் காரணமாக, உலகின் வளர்ந்த நாடுகளும், வளர்ந்து வரும் நாடுகளும் இந்தியாவின் நகர்வுகளை உற்று நோக்கி வருகின்றன. இது இந்தியாவை மையத்தில் வைக்கிறது.
Advertisment
இந்நிலையில், இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 2 வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் நடக்க உள்ளன. அதைக் கொண்டாடி தீர்க்க இந்திய மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். அந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் குறித்து இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
நிலவில் இறங்கும் சந்திரயான் - 3
இந்தியா கடந்த 2008-ம் ஆண்டு 'சந்திரயான்-1' விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும் அது உறுதிசெய்தது. அதன்பிறகு, 2019-ம் ஆண்டு நிலவின் தென்துருவத்துக்கு 'சந்திரயான்-2' விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால் அதன் 'லேண்டர்' கருவி நிலவின் தரையில் மோதி உடைந்தது. இருப்பினும், 'சந்திரயான்-2'-ல் அனுப்பப்பட்ட 'ஆர்பிட்டர்' கருவி தற்போதும் நிலவைச் சுற்றி வந்து தகவல்களை தந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தான், கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி 'சந்திரயான்-3' விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட 'சந்திரயான்-3' விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது. பிறகு நிலவுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப் பாதை குறைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து 'விக்ரம் லேண்டர்' கருவி பிரிக்கப்பட்டது. இந்த 'லேண்டர்', இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, சந்திரயான் 3 நிலவில் இறங்கும் இடம் கணிக்கப்பட்டுள்ளது. நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்பு. இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரை இறங்குகிறது. இன்று மாலை 5.40 மணியில் இருந்து தரை இறங்கும் பணி துவக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் இறங்கினால், நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்கும் முதல் நாடு என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை இந்தியா படைக்கும்.
செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா
10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென் – இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதி வருகின்றனர். இதில், நேற்று நடந்த முதல் சுற்று டிராவில் முடிந்தது.
மாக்னஸ் கார்ல்சென் கருப்பு நிற காய்களுடனும் , பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடிய நிலையில், ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று டிராவில் முடிந்தது.
இந்த நிலையில், இன்று 2வது சுற்று ஆட்டம் நடைபெற உள்ளது. பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவார். 2வது சுற்று போட்டியும் சமன் ஆனால் போட்டி டை பிரேக்கருக்கு நகரும். ஒருவேளை பிரக்ஞானந்தா வெற்றியை ருசித்தால் சாம்பியன் பட்டத்தை வாகை சூடுவார். இதன்மூலம், 2002ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த்-க்குப் பிறகு உலகக் கோப்பை வெல்லும் இந்தியர் என்கிற சாதனையை படைப்பார்.
இந்த இரு பெரும் கொண்டாட்டங்களுக்காக இந்தியா காத்திருக்கும் நிலையில், நெட்டிசன்கள் இந்த நிகழ்வுகள் குறித்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். அவை இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
There is an aspiration in the Indians - to be the best in the world at what we do. It's with this same aspiration that two huge events are going to take place on the 23rd of August 2023. Chandrayaan 3 is going to land on the moon and Praggnanandhaa is going to try and beat Magnus… pic.twitter.com/WcnQVmvj1q
Our two Pragyans will try to take us to meet our aspirations as a country today! The name given to the Rover of Chandrayaan 3 is Pragyan. It means wisdom in the Sanskrit language. And #Praggnanandhaa will fight on the board of chess! 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 pic.twitter.com/4zXj4mHucp
— Dr Deepak Krishnamurthy (@DrDeepakKrishn1) August 23, 2023