Advertisment

தினசரி ரூ.1,500-க்கு உணவு... மாதம் ரூ.5 லட்சத்துக்கு உயிரணு விற்பனை... எருமையின் விலையோ ரூ. 23 கோடி... விற்க மறுக்கும் உரிமையாளர்!

இந்த எருமையின் விலை ரூ. 23 கோடி, இவ்வளவு தொகையைக் கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும், அதன் உரிமையாளர் விற்பனை செய்யத் தயாராக இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
buffalo

இந்தியாவின் விலை உயர்ந்த எருமை ஹரியான மாநிலம், சிர்சாவில் உள்ளது. (Image screenshot from x/ @SilentHill115)

ஹரியானா மாநிலம், சிச்சா-வைச் சேர்ந்த அன்மோல் என்கிற எருமைதான் இந்தியாவின் விலை உயர்ந்த எருமை. இதன் விலையைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள். இந்த எருமையின் விலை ரூ. 23 கோடி, இவ்வளவு தொகையைக் கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும், அதன் உரிமையாளர் விற்பனை செய்யத் தயாராக இல்லை. 

Advertisment

ஒருவேளை அதன் உரிமையாளர் அந்த எருமையை ரூ.23 கோடிக்கு விற்பனை செய்தால், அதை வைத்து என்னவெல்லாம் வாங்கலாம் என்று அந்த எருமையின் மதிப்பை ஒரு வேடிக்கையாக கணக்கிட்டால், அந்த எருமையை விற்று, 2 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வாங்கலாம் அல்லது 10 மெர்சிடெஸ் பென்ஸ் கார்களை வாங்கலாம் அல்லது நொய்டாவில் 20 சொகுசு வீடுகளை வாங்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனாலும், அதன் உரிமையாளர் விற்கமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்.

காஸ்ட்லியான கார் என்றாலும் காஸ்ட்லியான எருமை என்றாலும் மெயிண்டனன்ஸும் அதாவதும் பராமரிப்பு செலவும் அதிகமாத்தானே இருக்கும். ஆமாம், இந்த எருமையின் மாதம் பராமரிப்புக்கு மட்டும் மாதம் ரூ.60,000 செலவாகிறது என்கிறார் அதன் உரிமையாளர் ஜக்தர் சிங்.

இந்தியாவின் விலை உயர்ந்த எருமை ஹரியான மாநிலம், சிர்சாவில் உள்ளது. இந்த எருமையை ஜக்தர் சிங் என்பவர் வளர்க்கிறார். இந்த எருமை முர்ரா என்கிற ஒரு உயர் ரக எருமை இனத்தின் ஆண் எருமை ஆகும். பார்க்கவே பிரமிப்பாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கும் இந்த எருமைக்கு அதன் உரிமையாளர் அன்மோல் என்று பெயர் வைத்து வளர்த்து வருகிறார். இந்த எருமை எப்படி ஊடகங்களின் வெளிச்சத்திற்கு வந்தது என்றால், ராஜஸ்தானின் புஷ்கர் விழாவையொட்டி நடைபெற்ற கால்நடை ஏலத்தில் ரூ. 23 கோடி வரை ஏலம் போனது. ஆனால், அதன் உரிமையாளர் ஜக்தர் சிங், அன்மோலை தனது மகனைப் போல பாவிப்பதால் எருமையை விற்பனை செய்வதற்கு மனமில்லை என்று அறிவித்துவிட்டார்.


கால்நடைகள் ஏலத்தில் ரூ.23 கோடி கொடுத்து வாங்க முன்வந்துள்ளார்கள் என்றால் அந்த அளவுக்கு இந்த எருமையின் சிறப்பு என்ன என்று பார்ப்போம். 

முர்ரா என்ற எருமை இனத்தைச் சேர்ந்த 5 அடி உயரம், 13 அடி நீளம் கொண்ட ஆண் எருமை ஆகும். இந்த எருமை 1,500 கிலோ எடை கொண்டது. இதன் மூலம், இந்த எருமை பார்ப்பதற்கு ஒரு யானையைப் போல பிரமாண்டமாக இருக்கும் எனறு தெரிகிறது.

அன்மோல் என்கிற எருமைக்கு தினசரி 5 கிலோ பால், 4 கிலோ மாதுளைச் சாறு, 30 வாழைப்பழங்கள், 20 புரதச்சத்து நிறைந்த முட்டைகள், 1/4 கிலோ பாதாம், உலர் பழங்கள் என ரூ. 1,500-க்கு உணவாக அளிக்கப்படுகிறது. இதன் மூலம், அன்மோலுக்கு உணவுக்கு மட்டும் மாதம் ரூ.60,000 செலவிடப்படுகிறது.

உரிமையாளர் ஜக்தர் சிங் தனது அன்மோலுக்கு மாதம் ரூ.60,000 செலவு செய்கிறார் என்றால் வருமானம் இருக்க வேண்டும் இல்லையா, ஆம் அன்மோல் எருமையின் உயிரணுக்கள் மட்டும் மாதம் 4-5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்மோலின் விந்து உயிரணுக்கள் கவனமாக சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

இந்தியாவின் விலை உயர்ந்த எருமை என்று உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கும் அன்மோலை தனது குடும்பத்தில் ஒருவராக, தனது மகனைப் போல பாவிப்பதால் அதை விற்பனை செய்ய மனமில்லை என்று அறிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment