New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/cats-6.jpg)
கன்னி வகையை சார்ந்த அந்த நாய் தொடர்ந்து மைனாவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. பதிலுக்கு மைனாவும் பறந்து பறந்து நாய்க்கு கோபமூட்ட முயலுகிறது.
Indie dog Kanni plays with Myna : கொரோனா தொற்று ஊரடங்கின் போது நமக்கு மிகப்பெரிய ஆறுதல்களாக இருந்தது வீட்டின் வளர்ப்பு பிராணிகளும், சமூக வலைதளங்களும் தான். வீட்டில் இருந்தே வேலை செய்து கொண்டு வளர்ப்பு பிராணிகளை பார்ப்பதும், அவற்றுடன் கொஞ்சி மகிழ்வதும், அவற்றின் சேட்டைகளை ரசிப்பதிலும் ஒரு வகை ஆனந்தம் இருக்க தான் செய்கிறது.
கூடங்குளம் சக்திவேல் இயற்கை விவசாய பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் நாட்டு நாய் ஒரு மைனாவுடன் விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கன்னி வகையை சார்ந்த அந்த நாய் தொடர்ந்து மைனாவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. பதிலுக்கு மைனாவும் பறந்து பறந்து நாய்க்கு கோபமூட்ட முயலுகிறது. ஆனால் நாயோ, மைனாவின் சிறிய உடலின் மீது கால் கூட பட்டுவிடாமல் மிகவும் ஜாக்கிரதையாக விளையாடும் காட்சி நெட்டிசன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோ தற்போது உங்களின் பார்வைக்கு.
சண்டை செய்றோம். ஆனா யாருக்கும் அடிபட கூடாது. கன்னி நாயுடன் போட்டிக்கு நிற்கும் மைனா; வைரலாகும் வீடியோ #ViralVideo #TrendingViralVideo pic.twitter.com/Oz6hgcyHwz
— Indian Express Tamil (@IeTamil) July 12, 2021
தமிழக நாட்டு நாய் வகைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது கன்னி வகை நாய்கள். செவலை மற்றும் கறுப்பு நிறங்களை குறிப்பதற்காக கன்னி என்று வழங்கப்பட்டு இப்போது அதே பெயரில் நிலைத்துவிட்டது. இந்த வகையான நாய்களை நாம் திருநெல்வேலி, தூத்துக்குடி வட்டாரங்களில் அதிகம் காணமுடியும். நெடுங்காலமாக வேட்டைக்காக வளர்க்கப்பட்ட நாய் இனம் இதுவாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.