'எக்ஸ்கியூஸ் மீ... குட்கா துப்பணும்; வின்டோவ திறக்க முடியுமா?' இண்டிகோ விமானத்தை அலறவிட்ட பயணி - IndiGo flight passenger asks to open window to spit gutka airhostess laughing unstoppable | Indian Express Tamil

‘எக்ஸ்கியூஸ் மீ… குட்கா துப்பணும்; வின்டோவ திறக்க முடியுமா?’ இண்டிகோ விமானத்தை அலறவிட்ட பயணி

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானப் பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்ணிடம், ‘எக்ஸ்க்யூஸ் மீ… குட்காவை வெளியே துப்ப வேண்டும், ஜன்னலை திறக்கமுடியுமா” என்று கேட்டு இண்டிகோ விமானத்தை அலற விட்ட நகைச்சுவை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

flight passenger asks to open window to spit gutka, 'எக்ஸ்கியூஸ் மீ... குட்கா துப்பணும்; வின்டோவ திறக்க முடியுமா, இண்டிகோ விமானத்தை அலறவிட்ட பயணி, IndiGo flight, flight passenger asks to open window to spit gutka, airhostess laughing unstoppable

இண்டிகோ ஏர்லைன் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்ணிடம், ‘எக்ஸ்க்யூஸ் மீ… வாயில் இருக்கும் குட்காவை வெளியே துப்ப வேண்டும் விமானத்தின் ஜன்னலை திறக்கமுடியுமா” என்று கேட்டு இண்டிகோ விமானத்தை அலற விட்ட நகைச்சுவை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அண்மையில், அரசியல் தலைவர் ஒருவர் விமானத்தில் எமர்ஜென்ஸி கதவு திறக்க முயன்றதாக எழுந்த சர்ச்சை ஓயாத நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானப் பயணி ஒருவர் விமானப் பணிப் பெண்ணிடம் குட்காவை துப்ப வேண்டும் கதவைத் திறக்க முடியுமா என்று கேட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த விமானப் பயணி, குட்காவை துப்ப வேண்டும் ஜன்னலைத் திறக்க முடியுமா என்று கேட்டதும் விமானப் பணிப் பெண்கள் சிரித்துள்ளனர்.

அந்த வீடியோவில், “‘எக்ஸ்க்யூஸ் மீ… குட்காவை வெளியே துப்ப வேண்டும் ஜன்னலை திறக்கமுடியுமா” என்று விமானப் பணிப் பெண்களிடம் கேட்க அவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல இண்டிகோ விமானத்தில் பயணித்த எல்லோரும் சிரிக்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Indigo flight passenger asks to open window to spit gutka airhostess laughing unstoppable