New Update
/
இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள வீடியோ, விமானங்களில் உணவு சுகாதாரம் குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: IndiGo passenger spots cockroaches in flight’s food area, company responds
சமீபத்தில் தான் சென்ற விமானத்தின் உணவு பகுதியில் கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்வதை பார்த்ததாக இண்டிகோ பயணி ஒருவர் கூறியுள்ளார். எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோவைப் பகிர்ந்த தருண் சுக்லா விமானங்களில் உணவு சுகாதாரம் குறித்து தீவிர கவலைகளை எழுப்பினார்.
Cockroaches and in the food area of a plane (anywhere for that matter) are just truly awful.
— Tarun Shukla (@shukla_tarun) February 22, 2024
One hopes @IndiGo6E takes a hard look at its fleet and checks how did this even happen given that it normally flies relatively new @Airbus A320s :
✈️ pic.twitter.com/78K69PYj6w
“கரப்பான் பூச்சிகள் மற்றும் விமானத்தின் உணவுப் பகுதியில் (அந்த விஷயத்தில் எங்கும்) இருப்பது மிகவும் மோசமானது. இண்டிகோ விமான நிறுவனம் (@IndiGo6E) அதன் விமானத்தை தீவிரமாகப் பார்க்க வேண்டும். இந்த கரப்பான்பூச்சி சாதாரணமாக புதிய ஏர்பஸ் ஏ320களில் (@Airbus A320s) பறக்கிறது என்பதால் இது எப்படி நடந்தது என்பதைச் சரிபார்க்கும் நம்புகிறேன்” என்று சுக்லா எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் கரப்பான் பூச்சிகளைக் காட்டும் வீடியோவுக்கு இண்டிகோ நிறுவனத்தின் பதில் என்று சுக்லா கூறியுள்ளார்.
“எங்கள் விமானம் ஒன்றில் அசுத்தமான மூலையைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது எங்களுக்குத் தெரியும். எங்கள் ஊழியர்கள் உடனடியாக விமானத்தில் தேவையான நடவடிக்கை எடுத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாங்கள் உடனடியாக முழு விமானத்தையும் சுத்தம் செய்து, ஸ்மோக்கிங் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் நடைமுறைகளை மேற்கொண்டோம். இண்டிகோவில், பாதுகாப்பான, தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்வதற்காக, பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், தூய்மை மற்றும் சுகாதாரத்தின் மிக உயர்ந்த தரத்தை நாங்கள் பராமரித்து வருகிறோம்,” என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகக்களில் எதிர்வினையைத் தூண்டியது, இந்த வீடியோ பதிவுக்கு கம்மெண்ட் செய்தவர்கள் விமான நிறுவனத்தை அவமதித்தனர். ஒரு பயனர் குறிப்பிடுகையில், “இண்டிகோ விமான நிறுவனம் @IndiGo6E உண்மையில் மோசமான நிலைக்கு போய்விட்டது. உலகின் சிறந்த ஒன்று மோசமான ஒன்றாகி விட்டது. அவர்களின் தலைமை முற்றாக கைவிட்டது போல் தெரிகிறது. மற்றொரு புதிய பட்ஜெட் கேரியர் நடைபெறுவதற்கான நேரம் வருமா?” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் குறிப்பிடுகையில், “இண்டிகோ தரப்பிலிருந்து மிகவும் திமிர்பிடித்த, சாக்குபோக்கான பொறுப்பற்ற பதில் அளித்திருக்கிறார்கள். டி.ஜி.சி.ஏ இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு விமான நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.