இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : நிலநடுக்கத்தால் கட்டிடம் குலுங்கிய போதும் கண்னைக் கூட திறக்காமல் தொழுகை செய்துள்ளார் இமாம் என்ற இஸ்லாமிய குரு.
இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 145 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8, 7 ஆகப் பதிவாகின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இந்தோனேஷியா நிலநடுக்கம்:
தீவில் இருந்த 80% வீடுகள் நாசமாகின. லாம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் பாலி தீவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அப்போது பாலி தீவில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நடந்துகொண்டிருந்தது. இமாம் என்ற மதக்குரு இந்த தொழுகையை முன்நின்று நடத்தினார்.
அப்போது திடீரென்று மசூதி நிலநடுக்கத்தால் ஆட தொடங்கியது. இதனால் தொழுகையில் இருந்தவர்கள் நிற்க முடியாமல் தடுமாறினர். ஆனால் அப்போதும் இமாம் தொழுகையை நிறுத்தவில்லை. தன் கைகளை சுவரில் ஊன்றியபடி தொழுகையைத் தொடர்ந்தார்.
கட்டிடம் மெல்ல மெல்ல பலமாக ஆட தொடங்கியது. ஆனால் இமாம் ஒருகணம் கூட தொழுகையை நிறுத்தாமல் சுவரில் கை ஊன்றியப்படியே கண்ணை திறக்காமல் தொழுகையை தொடர்ந்தார். இவை அனைத்தையும் அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்ஃபோனில் பதிவு செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த பதிவில் இந்தக் காட்சியைப் பார்த்த தனக்கு அழுகை வந்துவிட்டதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
.