இண்டஸ்லேண்ட் வங்கியின் பங்கு விலை கடுமையான ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வங்கியின் 2-வது காலாண்டு வருவாய் முதலீட்டார்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமத்தை அளித்துள்ளது. இதனால், இன்று வெள்ளிக்கிழமை இண்டஸ்லேண்ட் வங்கியின் பங்குகள் 15%-கும் அதிகமாக சரிந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை முதல் இண்டஸ்லேண்ட் வங்கி பங்கு பற்றிய தேடல்கள் கூகுளில் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, கூகுள் தேடலில் 'இண்டஸ்லேண்ட் வங்கி பங்கு' டாப் ட்ரெண்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறது. ட்ரென்ட்ஸ் கூகுள் (trends.google) இணைய பக்கத்தின் படி, இன்று வெள்ளிக்கிழமை காலை ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேடல்கள் செய்யப்பட்டன. மேலும் இந்த தேடல்கள் 1000 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IndusInd Bank Share tops Google search trending topics
செப்டம்பர் 2024 உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில், இண்டஸ்லேண்ட் வங்கி அதன் நிகர லாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு 39% (YoY) சரிவை அறிவித்த பிறகு, அதன் பங்கு ரூ.1,089 இல் நிறைவடைந்தது. 2,138 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட சந்தை எதிர்பார்ப்புகளை விட கணிசமாகக் குறைந்து, 2-வது காலாண்டில் அந்த வங்கி ரூ.1,325 கோடி நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்தது.
இதனை ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு இதே காலாண்டில் இண்டஸ்லேண்ட் வங்கி ரூ.2,181.47 கோடி லாபம் ஈட்டி இருந்தது.
ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் படி, இண்டஸ்லேண்ட் வங்கி நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் நிகர லாபத்தில் 40% சரிவை 1,325 கோடி ரூபாயாக பதிவு செய்துள்ளது. இது மோசமான கடன்களுக்கான ஒதுக்கீடுகளின் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. ப்ளூம்பெர்க் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், அந்த காலாண்டில் வங்கி ரூ. 2,214 கோடி நிகர லாபம் ஈட்டுவதாக மதிப்பிட்டுள்ளதால், தனியார் கடன் வழங்குநரின் பாட்டம் லைன் எதிர்பார்ப்புகளைத் தவறவிட்டது.
நிகர வட்டி வருமானம், ஈட்டப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட வட்டிக்கு இடையிலான வித்தியாசம், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.5,077 கோடியிலிருந்து இரண்டாவது காலாண்டில் 5% அதிகரித்து ரூ.5,347 கோடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.