New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/12/FwzyD3DdmujsXlRTxB3O.jpg)
இன்ஃபோசிஸ் நிறுவனம் பெரிய அளவில் ஆள்குறைப்பு செய்துள்ளது, கண்ணீர் விட்டு அழுத பயிற்சி பணியாளர்கள்; கோபத்தில் கொந்தளித்த நெட்டிசன்கள். (Image: X)
இன்ஃபோசிஸ் நிறுவனம் பெரிய அளவில் ஆள்குறைப்பு செய்துள்ளது, கண்ணீர் விட்டு அழுத பயிற்சி பணியாளர்கள்; கோபத்தில் கொந்தளித்த நெட்டிசன்கள். (Image: X)
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பெரிய அளவிலான ஆள்குறைப்பு நடவடிக்கை பலருக்கு ஒரு பேரிடியாக வந்துள்ளது. பட்டம் பெற்ற பிறகு 2 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்து 2024 செப்டம்பரில் இன்ஃபோசிஸில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க காத்திருந்த அவர்கள், இப்போது 6 மாதங்களுக்குப் பிறகு வேலையில்லாமல் இருப்பதைக் கண்டனர். வீடு திரும்ப டாக்சிகள் மற்றும் பேருந்துகளை முன்பதிவு செய்ய அவர்கள் போராடியபோது, கடுமையான யதார்த்தத்தில் மூழ்கிப் போனார்கள் - அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு எப்படிச் செய்தியைச் சொல்வார்கள்?
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளம் பயிற்சி பணியாளர் பிப்ரவரி 7-ம் தேதி இன்ஃபோசிஸ் அதிகாரிகளிடம், “தயவுசெய்து இரவு தங்க அனுமதியுங்கள். நான் நாளை கிளம்பிவிடுவேன். நான் இப்போது எங்கே போவேன்?” என்று கெஞ்சியபோது, மைசூர் வளாகத்தில் திடீரென பணிநீக்கம் செய்த பிறகு உடனடியாக காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான புதியவர்களில் அவரும் ஒருவர் என்று மணி கன்ட்ரோல் அறிக்கை தெரிவிக்கிறது.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பணிநீக்கங்கள் செயல்படுத்தப்பட்டன. காலை 9:30 மணிக்குத் தொடங்கி, பயிற்சி பணியாளர்கள் 50 பேர் கொண்ட குழுக்களாக அழைக்கப்பட்டு, தங்கள் மடிக்கணினிகளைக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். வெளியே பாதுகாப்புப் படையினராலும் உள்ளே பவுன்சர்களாலும் பாதுகாக்கப்பட்ட ஒரு அறைக்குள் அடைக்கப்பட்டனர். அன்றைய தினம் மூத்த ஊழியர்களும் அமெரிக்க வாடிக்கையாளர்களும் வளாகத்தில் இருந்ததால், இன்ஃபோசிஸ் பெரிய அளவிலான பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததை ஒரு பயிற்சி பணியாளர் நினைவு கூர்ந்தார். “நாங்கள் உள்ளே வரும்போது பார்வையைத் தடுக்க பேருந்துகள் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு, ஒவ்வொருவராக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். கவனத்தை ஈர்க்காத வகையில் நாங்கள் வெளியே அழைத்துச் செல்லப்பட்டோம்” என்று ஒரு பயிற்சி பணியாளர் மணி கன்ட்ரோலுக்கு தெரிவித்தார்.
அனுதாபம், கோபத்துடன் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
ஒரு பயனர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதினார், “இது உண்மையிலேயே மனவேதனை அளிக்கிறது. இந்த புதியவர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து வேலைக்கான கடிதங்களைப் பெற்று 2–2.5 ஆண்டுகள் காத்திருந்து இறுதியாக செப்டம்பர் 2024-ல் வேலையில் சேர்ந்தனர். இப்போது, வெறும் 6 மாதங்களுக்குப் பிறகு, அவர்களில் கிட்டத்தட்ட 700 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பலர் இதற்காக மற்ற வாய்ப்புகளை நிராகரித்திருக்கலாம் - இந்த மோசமான யதார்த்தத்தை மட்டும் எதிர்கொள்கிறர்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவு, இந்தக் காட்சியை "சமீப காலங்களில் மிகவும் அழிவுகரமான புகைப்படம்" என்று விவரித்தது, இது இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றில் நம்பிக்கை வைத்திருந்த இளம் தொழில் வல்லுநர்கள் மீதான உணர்ச்சி ரீதியான பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது.
ஒரு எக்ஸ் பயனர், பணிநீக்க நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கையில் பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறினார். “பல இளம் கல்லூரி பட்டதாரிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பணிநீக்கங்களைத் தாங்க வேண்டியிருக்கும். 2025 ஒரு கடினமான பொருளாதார ஆண்டாக இருக்கப் போகிறது. பணிநீக்கங்கள் மக்களின் வாழ்க்கை, வருமானம் மற்றும் திருமணங்களில்கூட பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று கூறியுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனம் பெரும் அளவில் ஆள்குறைப்பு செய்யப்படுவது குறித்து வாய் திறக்காமல் இருப்பதால், இந்தப் புதியவர்களின் துயரம் ஆன்லைனில் விவாதங்களைத் தொடர்ந்து தூண்டிவிடுகிறது. இது இந்திய ஐடி துறையில் வேலை பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த பணியமர்த்தல் நடைமுறைகள் குறித்த கவலைகளை எழுப்புகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.