சி.என்.பி.சி - டிவி18 குளோபல் லீடர்ஷிப் உச்சிமாநாட்டில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி எல்விஸ் பிரெஸ்லி பாடலைப் பாடிய வீடியோ ஆன்லைனில் நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகிறது. அவரது மனைவியும், ராஜ்யசபா எம்.பி-யுமான சுதா மூர்த்திக்காக ரொமாண்ட்டிக்காக பாடியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Narayana Murthy sings Elvis Presley’s ‘Can’t Help Falling in Love’ for wife Sudha Murty, leaves netizens impressed
தற்போது வைரலாகி வரும் இன்ஸ்டாகிராம் வீடியோவில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி மேடையில் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர் ஒரு கையில் மைக்ரோஃபோனும், மறுகையில் ஸ்மார்ட்போனும் வைத்திருக்கிறார் - அவர் தனது போனில், பிரபல அமெரிக்க பாடகர் பிரெஸ்லியின் கிளாசிக் பாடலான, Can’t Help Falling in Love (காதலில் விழ உதவ முடியாது) என்ற வரிகளைப் பார்த்து பாடினார்.
வீடியோவைப் பாருங்கள்:
Infosys co-founder N. R. Narayana Murthy sings an Elvis classic, dedicates to his wife Sudha Murty, at the Global Leadership Summit! #DontMiss #CNBCTV18GLS #CNBCTV18at25 #cnbctv18digital @HSBC_IN @embassy_reit @VisitSaudi @ITCCorpCom @AWSCloudIndia @NSEIndia @ShereenBhan pic.twitter.com/PykLddnbU9
— CNBC-TV18 (@CNBCTV18News) November 14, 2024
"இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி உலகளாவிய தலைமைத்துவ உச்சி மாநாட்டில் எல்விஸ் கிளாசிக் பாடலைப் பாடுகிறார், அதைத் தனது மனைவி சுதா மூர்த்திக்காக டெடிகேட் செய்துல்லார்" என்ற தலைப்புடன் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.
இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒரு பயனர் "அவருக்கு உண்மையில் இசை தெரியும்." என்று எழுதியுள்ளார். மற்றொரு பயனர், "காதல் மூர்த்தி" (Pookie Murty) என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பேசுகையில், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி வாரத்திற்கு 6 நாள் வேலைக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என்றார். “மன்னிக்கவும், நான் என் பார்வையை மாற்றவில்லை. இதை என்னுடன் என் கல்லறைக்கு எடுத்துச் செல்வேன்” என்று கூறினார். அதாவது நான் சாகிற வரை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று கூறினார்.
இளம் தொழில் வல்லுநர்களை வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய ஊக்குவிக்கும் மூர்த்தியின் முந்தைய கருத்தைப் பார்த்து, இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், “இந்த நேரம் அந்த 70 மணி நேரத்தில் கணக்கிடப்படுமா?” என்று கிண்டலாகக் கேட்டுள்ளார்.
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி கூறுகையில், இந்தியாவின் முன்னேற்றம் அதன் குடிமக்கள் தியாகம் செய்ய விரும்புவதைப் பொறுத்து இருக்கும் என்றார். கடினமான முயற்சியை தனிப்பட்ட மதிப்பு என்பதைவிட ஒரு கடமையாக அவர் கருதுகிறார். குறிப்பாக இந்தியாவின் பொது நிதியுதவி கல்வி முறையிலிருந்து லாபம் அடைந்தவர்களுக்கு கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.