Advertisment

ஐதராபாத் போக்குவரத்தை சீர்குலைத்த ‘மனி ஹண்ட்’ வைரல் வீடியோ; இன்ஸ்டாகிராம் கிரியேட்டர் கைது

ஹைதராபாத் போக்குவரத்தை சீர்குலைத்த வைரலான ‘பண வேட்டை’ வீடியோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் கிரியேட்டரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
money hunt

இன்ஸ்டாகிராமில் ‘மனி ஹண்ட்’ அதாவது பண வேட்டை என்ற உள்ளடக்கத்தை உருவாக்கியவர், ஆங்கர் சந்து என்று அழைக்கப்படும் பானுசந்தர் கைது. (Image: Instagram/chandu_rockzz_003)

இன்ஸ்டாகிராமில் ‘மனி ஹண்ட்’ அதாவது பண வேட்டை என்ற உள்ளடக்கத்தை உருவாக்கியவர், ஆங்கர் சந்து என்று அழைக்கப்படும் பானுசந்தர், ஹைதராபாத் வெளிவட்ட சாலையில் (ORR) ஒரு வைரல் வீடியோ ஸ்டண்ட் போக்குவரத்தை சீர்குலைத்து பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தியதால் சட்ட சிக்கலில் சிக்கினார்.

Advertisment

பாலாநகரில் வசிக்கும் 30 வயது பான்சந்தர், காட்கேசரில் உள்ள வெளிவட்ட சாலையில் எக்சிட் 9 அருகே சாலையோரம் ரூ.200 நோட்டுக் கட்டுகளை வீசுவதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், அந்த இடத்தில் ரூ.20,000 மறைத்து வைத்திருப்பதாகக் கூறி, ‘பண வேட்டை’யில் பங்கேற்குமாறு பார்வையாளர்களுக்கு சவால் விடுத்தார்.

இந்த வீடியோ வேகமாக வைரலானதால், பணத்தை தேடுவதற்காக பலர் தங்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு ஐதராபாத் வெளிவட்ட சாலைக்கு விரைந்தனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதுகாப்பு கவலைகளை எழுப்பியது, இதனால், ரோந்து காவலர்கள் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Advertisment
Advertisement

ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் ஜி. சுதீர் பாபு, இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து, இது குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியது மற்றும் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. "இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு மோசமான முன்மாதிரியாகவும் அமைகின்றன," என்று அவர் கூறினார்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த காட்கேசர் காவல் நிலைய போலீஸார், இன்ஸ்டாகிராம் வீடியோவை உருவாக்கிய பானுசந்தரை கைது செய்து பாரத் நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 125 மற்றும் 292 மற்றும் தேசிய நெடுஞ்சாலைச் சட்டப் பிரிவு 8(1பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், சமூக ஊடக பயனர்கள் பொறுப்புடன் செயல்படவும், இதுபோன்ற ஸ்டண்ட்களைத் தவிர்க்கவும் ராச்சகொண்டா காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment