New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/DSC02610-5.jpg)
Instagram viral photo
வெள்ள பாதித்துள்ள பல இடங்களில் நின்று வித விதமான போஸ்கள்.
Instagram viral photo
Instagram viral photo : பீகார் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் நிலையில், சாலைகளில் வெள்ளம் போல் பாயும் இடங்களில் நின்று கல்லூரி மாணவி எடுத்த ஃபோட்டோ ஷூட் இணையத்தில் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1 வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் பீகார் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பொதுமக்கள் வீடுகளை இழந்து மீளா துயரத்தில் மூழ்கி உள்ளனர். அரசாங்கம் நிவாரண நிதி உட்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமூகவலைத்தளங்களில் பீகாருக்கு ஆதரவாகவும், முடிந்த அளவு உதவிகள் செய்யுமாறும் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நேரத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பாட்னா தேசிய ஆடை வடிவமைப்பு கல்லூரியில் பயிலும் அதிதி சிங் என்னும் மாணவி சாலை வெள்ளத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் வெள்ளத்தில் மட்டும் இதுவரை 29 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லை தலைநகர் பாட்னா உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நேரத்தில் அதே மாநிலத்தை சேர்ந்த மாணவி சமூக அக்கறையின்றி தண்ணீர் மிதக்கும் சாலையிலேயே நின்று நடத்திய கிளாமர் ஃபோட்டோ ஷூட் பார்ப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் உட்பட பலரும் பெண்ணின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஆனால். இதற்கு அந்த மாணவி முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த ஃபோட்டோ ஷூட்டிற்கு அவர் சொல்லும் காரணம் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டோ ஷூட் பீகார் மக்களின் பிரச்சனையை வெளியில் தெரியப்படுத்தானாம். எங்கள் மாநிலத்திற்கு உதவி வேண்டும் என்பதற்காகதான் பலரின் கண்களை பீகார் பக்கம் திருப்பவே இதுப்போன்ற ஃபோட்டோ ஷூட் நடத்தியதாக கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.