மொத்த இணையவாசிகளை கண்கலங்க வைத்த பெண்ணின் வீடியோ!

இணையவாசிகள் டெக்னாலஜிக்கு நன்றி கூறி வருகிறார்கள்.

இணையவாசிகள் டெக்னாலஜிக்கு நன்றி கூறி வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Instagram viral video today

Instagram viral video today

Instagram viral video today  : நாம் அன்றாட வாழ்க்கையில் கைத் தொலைபேசி, மடிக்கணினி, புகைப்படக் கருவி என பல சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனம் எது? நீங்கள் என்பதை விட இந்த தொழில்நுட்ப உலகில் நூறுக்கு தொண்ணூறு பேர் பயன்படுத்தும் சாதனம் மொபைல் ஃபோன்கள் தான்.

Advertisment

குறுகிய காலத்தில் என்ன ஒரு அபரிவிதமான வளர்ச்சி என்று கேட்டால் அது ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்பாட்டை பார்த்து தான் இருக்கும். உலகில் எந்த ஒருமூலையில் இருந்து கொண்டும் யாரை வேண்டுமானாலும் தொடர்புக் கொள்ளலாம். போன் காலில் மட்டுமில்லை வீடியோ கால் மூலம் கூட பேசலாம். அப்போது அவர்களை நேரில் பார்த்து பேசுவது போல் இருக்கு.

இப்படி நவீன வளர்ச்சியானது ஒருபுறம் பறக்க, சிலருக்கு இது தேவையா? உங்களுக்கு இதனால் பயன் இல்லை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட நிகழ்வுகளும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. ஆம் முன்பெல்லாம் காது கேட்க தெரியாதவர்களுக்கு, பேச தெரியாதவர்களுக்கு எதுக்கு செல்போன் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் ஸ்மார்ட்ஃபோன்களின் அறிமுகத்திற்கு பின்பு அப்படியே அந்த கேள்வி தலைகீழானது. அவர்களுக்கு ஏற்ப ஏகப்பட்ட வசதிகளுடன் செல்போன் நிறுவனங்கள் மொபைல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

 

View this post on Instagram

 

Bliss!

A post shared by Naveen Kukreja (@thenaveenkukreja) on

Advertisment
Advertisements

அதன் பயன் தான் இந்த வீடியோ. ஸ்மார்ட்ஃபோன்களில் இடம்பெற்றிருக்கும் வீடியோ கால் வசதி மூலம் ரயில் நிலையத்தில் வாய் பேச முடியாத பெண் ஒருவர், தனக்கான சைகை மொழியில் தனது நண்பர்களுடன் உரையாடியுள்ளார். எப்போதுமே பரபரப்பாக காணப்படும் அந்த ரயில் நிலையத்தில் பெண்ணின் வீடியோ கால் நெட்டிசன்களை திரும்பி பார்க்க வைத்தது. வேகமாக பரவிய இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் டெக்னாலஜிக்கு நன்றி கூறி வருகிறார்கள்.

Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: