New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-42.jpg)
instagram viral video
புனித நீரை அந்த நபர், தன்னுடன் வந்திருந்த பெண்ணின் பின்புறத்தில் தெளித்து விளையாடுகிறார்.
instagram viral video
கோவிலிருந்து வரும் புனித நீரை பின்புறம் தெளித்து கலங்கப்படுத்திய சுற்றுலா பயணிகளான காதல் ஜோடிகள் அதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் ரஷ்யாவை சேர்ந்த காதல் ஜோடிகள் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த வீடியோ ஒன்று மிகப் பெரிய எதிர்ப்பை சம்பாதித்தது. அவர்கள் தெரிந்து செய்தார்களா? அல்லது தெரியாமல் இதுப் போன்ற காரியத்தில் ஈடுப்பட்டார்களா? என்பதை தெரியவில்லை. ஆனால், அவர்களின் பதிவிட்டிருந்த வீடியோக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் பதிவாகின. அவர்கள் இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டன.
அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த காட்சிகள் இவை தான். இந்த ஜோடிகள் சமய வழிபாட்டு இடம் ஒன்றில் நிற்கிறார்கள்.அப்போது சிலை ஒன்றிலிருந்து வெளியே வரும் புனித நீரை அந்த நபர், தன்னுடன் வந்திருந்த பெண்ணின் பின்புறத்தில் தெளித்து விளையாடுகிறார்.
அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த பெண் சபினா டொலெஸாலொவா தான் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர்களை புனித நீரை கலங்கப்படுத்தி விட்டதாக சர்ச்சைகள் வெடித்தன. பாலியில் உள்ள ஊபட் நகரத்தின் 'மங்கீ ஃபோரஸ்ட்' எனும் கோவிலில் இந்தக் காணொளி எடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வீடியோ இடம்பெற்றிருந்த ரஷ்ய ஜோடிகள் இருவரும் மனம் உருகி மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அங்கு வந்தது புனித நீர் என்பது தெரியாமல் இருவரும் இதுப்போன்ற செயலில் ஈடுப்பட்டதாக கூறியுள்ளனர். இதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பாலியின் உள்ளூர் மக்களால் வணங்கப்படும் இந்த புனித தலமானது 700க்கும் மேலான குரங்குகளும் மூன்று கோவில்களும் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.