Advertisment

இன்ஸ்டாவில் பார்ப்பதெல்லாம் நிஜம் இல்லை... ஃபோட்டோவில் விளக்கிய சுந்தர் பிச்சை

இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டு வெறும் சில மணி நேரங்களிலேயே 2.5 லட்சம் லைக்குகளையும் 1500க்கும் மேற்பட்ட கமெண்ட்களையும் இந்த பதிவு பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Instagram vs Reality Perfectly Described By Sundar Pichai

கூகுள் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சுந்தர் பிச்சை

Instagram vs Reality Perfectly Described By Sundar Pichai : நிஜ வாழ்க்கையில் பார்க்கும் விசயங்களுக்கும் சமூக வலைதளங்களிலும் காணும் வாழ்க்கையும் நிச்சயமாக ஒரே மாதிரியானது அல்ல. இதையும் சமூக வலைதளங்களில் பலர் பகிர்வதை பார்த்திருப்போம். கூகுள் நிறுவனத்தின் தலைவரான சுந்தர் பிச்சை தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் வெர்சஸ் ரியாலிட்டி என்று கூறி இரண்டு புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். முதல் புகைப்படத்தில் சுந்தர் பிச்சையின் புகைப்படமும், இண்டாவது புகைப்படத்தில் முதல் புகைப்படத்தின் பிஹைண்ட் தி சீன் காட்சிகளையும் பதிவேற்றியுள்ளார்.

Advertisment

மேலும் படிக்க : ஃபோட்டோகிராஃபி மீது காதல் ; வீட்டையும் கேமராவாக மாற்றிய புகைப்பட கலைஞர்

 

View this post on Instagram

 

IG vs. reality...comfy shoes + checking on @fcbarcelona scores between takes:)

A post shared by Sundar Pichai (@sundarpichai) on

அதன் கேப்சனில் பார்சிலோனா கால்பந்தாட்டத்தின் ஸ்கோரை செக் செய்து கொண்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டு வெறும் சில மணி நேரங்களிலேயே 2.5 லட்சம் லைக்குகளையும் 1500க்கும் மேற்பட்ட கமெண்ட்களையும் இந்த பதிவு பெற்றது. ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்த அவர் தற்போது இந்தியாவின் டிஜிட்டல் எக்கானமியை உயர்த்த 75 ஆயிரம் கோடியை இந்தியாவில் முதலீடு செய்வது குறித்தும் சமீபத்தில் மோடியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sundar Pichai Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment