New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/07/DSC02610-37.jpg)
Internet viral today
கடித்து துப்பிய பாம்பின் புகைப்படமும் இணையத்தில் தற்போது வைரல்
Internet viral today
போதையில் தன்னை கடிக்க வந்த பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பி பழித் தீர்த்துள்ளார் போதை ஆசாமி ஒருவர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரோலி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். சம்பவதன்று ராஜ்குமார் குடி போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டுக்குள் நுழைந்த பாம்பு ராஜ்குமாரின் காலை கடித்தது.
வலியால் கண்விழித்து பார்த்த அவர், பதிலுக்கு போதையில் தன்னை கடித்த பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பினார். வீடே ரத்த வெள்ளமானது. பாம்பை கடித்து துப்பிவிட்டு அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். பின்பு வீடு திரும்பிய ராஜ்குமாரின் உறவினர்கள் அவர் மயங்கி கிடப்பதை பார்த்து அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ராஜ்குமார் கடித்ததில் அந்த பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குடி போதையில் தன்னை கடிக்க வந்த பாம்பை ராஜ்குமார் குடித்து துப்பி பழித்தீர்த்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லை அவர், கடித்து துப்பிய பாம்பின் புகைப்படமும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.